குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேச அரசின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடியரசுத்தலைவர் அருணாச்சலப்பிரதேச மாநிலம் உருவானதன் 37 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார்.

प्रविष्टि तिथि: 20 FEB 2023 6:17PM by PIB Chennai

இட்டாநகரில் நடைபெற்ற அருணாச்சல பிரதேச அரசின் வரவேற்பு நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்ட குடியரசுத்தலைவர் அருணாச்சலப்பிரதேச மாநிலம் உருவானதன் 37 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் வடகிழக்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய மாநிலமாகவும் எல்லை மாநிலமாகவும் இருப்பதால் அருணாச்சலப் பிரதேசம் புவி அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ளது என்று தெரிவித்தார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்புக்கு சிறந்த உட்கட்டமைப்புக்கு அவசியமென்று கூறினார். அருணாச்சலப் பிரதேசத்தின் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

600 மெகாவாட் திறனுடன் காமெங் நீர்மின் நிலையத்தின் மூலம் அதிக மின்உற்பத்தி செய்யும் மாநிலமாக அருணாச்சலப் பிரதேசம் திகழ்கிறது என்று அவர் கூறினார்.  அண்மையில் திறக்கப்பட்ட டோன்யி போலோ விமான நிலையம் மூலம் மாநிலத்தின் போக்குவரத்து மேம்படும் என்றும், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்தார்.

***

AP/IR /JJ/PK

 


(रिलीज़ आईडी: 1900838) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi