தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
இஎஸ்ஐசி-யின் சார்பில் 8 இடங்களில் புதிய மருத்துவமனைகள் அமைக்கப்படவுள்ளதாக திரு பூபேந்தர் யாதவ் அறிவிப்பு
प्रविष्टि तिथि:
20 FEB 2023 4:54PM by PIB Chennai
மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் சண்டிகரில் இன்று தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) 190-வது கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், தொழிலாளர்களின் சமூகப்பாதுகாப்பை வலுப்படுத்தும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இஎஸ்ஐ கழகம், பெலகாவி (கர்நாடகா), ஷம்ஷாபாத் (தெலுங்கானா), பாராமதி (மகாராஷ்டிரா), கிஷன்கர், அஜ்மீர் (ராஜஸ்தான்), பாலசோர் (ஒடிசா) ஆகிய இடங்களில் 100 படுக்கைகளுடன் மருத்துவமனைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கர்னூலில் (ஆந்திரா) 30 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையும், கிரேட்டர் நொய்டாவில் (உத்தரப் பிரதேசம்) 350 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையும் அமைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். இது தவிர சில மருத்துவமனைகளை தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். புதிதாக அமைக்கப்படவுள்ள மருத்துவமனைகள் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தால் நேரடியாக நடத்தப்படும் என்றும், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிறந்த மருத்துவ வசதிகளை இந்த மருத்துவமனையில் பெறலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கொரனோ பெருந்தொற்றுக்காலத்தில் வேலை இழந்த, காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், அடல் பீமிட் வியாக்டிக் கல்யாண் திட்டத்தின் கீழ், பயன்களை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்க கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1900760
***
AP/PKV/AG/PK
(रिलीज़ आईडी: 1900784)
आगंतुक पटल : 296