உள்துறை அமைச்சகம்

புதுதில்லி காவல்படையின் 76வது நிறுவன தினத்தையொட்டி இன்று நடைபெற்ற கொண்டாட்டங்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா தலைமையேற்பு

Posted On: 16 FEB 2023 5:21PM by PIB Chennai

புதுதில்லி காவல்படையின் 76வது நிறுவன தினத்தையொட்டி இன்று (16.02.2023) நடைபெற்ற கொண்டாட்டங்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா தலைமையேற்றார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர், பாஸ்போர்ட் சரிபார்த்தல் தொடர்பாக அனைத்து நடவடிக்கைளும் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் சேவைகளையும், புதுதில்லியில் நடமாடும் தடயவியல் வாகனங்களையும் தொடங்கி வைத்தார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் தேசிய தடயவியல் அறிவியல் வளாகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பேசும் போது மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, நம் நாடு சுதந்திரம் அடைந்து புகழ் பெற்ற வரலாற்று பின்புலத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை புதுதில்லி காவல்துறையை ஒட்டுமொத்த நாடும், புகழும் அளவிற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுதில்லியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரகங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்களின் வீடுகளும் உள்ளது. புதுதில்லி காவல்துறை பாதுகாப்பு முறையை உலகமே பாராட்டுகிறது என்றார்.

நம் நாடு சுதந்திர பெற்ற பிறகு காவல் துறையும் அதன் செயல்பாடுகளும் உடனடியாக மாறியிருக்க வேண்டும். சுதந்திரத்திற்கு முன் காவல்துறையின் பணியில் சேவைகளுக்கு மதிப்பு கொடுக்கும் பாங்கு இல்லை. உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் ஆங்கிலேய அரசின் எண்ணங்களை செயல்படுத்துதல் போன்றவற்றிலேயே காவல்துறை கவனம் செலுத்தியது. ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு அமைதி, சேவை, நீதி  போன்ற முக்கிய கோட்பாட்டுகளுக்கு இணங்க புதுதில்லி காவல்துறை செயல்படத் தொடங்கியது. இதன் விளைவாக 75 ஆண்டுகால பாதையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. கொவிட்- 19 பெருந்தொற்று காலத்தின் போது புதுதில்லி காவல்துறையின் மனிதநேய முகம் வெளி உலகிற்கு நன்கு புலப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களை தங்களது குடும்ப உறுப்பினர்களாக கருதிய புதுதில்லி காவல்துறையினர் அவர்களைப் பாதுகாத்தனர் என்றார்.

இன்று பாஸ்போர்ட் சரிபார்த்தல் ஆன்லைன் சேவை  தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் காவல்துறை சரிப்பார்த்தல் முறை 15 நாட்களுக்குப் பதிலாக 5 நாட்களில் நிறைவு பெற்றுவிடும். பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்கள் நாளொன்றுக்கு சராசரியாக 2,000 வரை அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆன்லைன் சேவை மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பெருமளவு குறைக்கும் என்றார். இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் ஆதார ஆவணங்கள் சட்டம் போன்றவற்றில் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ் மத்திய அரசு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1899860

SG/GS/SG/KRS        

***



(Release ID: 1899903) Visitor Counter : 156


Read this release in: English , Urdu , Marathi , Gujarati