குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

விவசாயம் அல்லாத புதிய அலகுகளை அமைப்பதில் தொழில்நிறுவனங்களுக்கு உதவ காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத்தின் மூலம் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத்திட்டதின் கீழ் எம்எஸ்எம்இ - களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன

Posted On: 13 FEB 2023 2:41PM by PIB Chennai

விவசாயம் அல்லாத துறையில் புதிய அலகுகள் அமைப்பதில் தொழில்நிறுவனங்களுக்கு உதவ காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூலம்   பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தை எம்எஸ்எம்இ அமைச்சகம் அமலாக்குகிறது. பரவலாக இருக்கின்ற பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள், ஊரக மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு வீடு தேடி சாத்தியமானவரை சுயவேலை வாய்ப்புகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.

       பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின்கீழ் பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு ஊரகப்பகுதிகளிள் விளிம்புத்தொகை மானியமாக 25 சதவீதமும் நகரப்பகுதிகளில் 15 சதவீதமும் வழங்கப்படுகிறது. ஷெட்யூல்ட் வகுப்பினர், ஷெட்யூல்ட் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், வடகிழக்குப் பகுதி, மலைப்பகுதி, எல்லைப் பகுதியைச் சேர்ந்த பயனாளிகள் போன்ற சிறப்புப்பிரிவினருக்கு ஊரகப்பகுதிகளில் விளிம்புத்தொகை மானியம் 35 சதவீதமும் நகரப்பகுதிகளில் 25 சதவீதமும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பொருள் உற்பத்தித் துறைக்கு அதிகபட்சம் ரூ. 50 லட்சமும் சேவைத்துறைக்கு ரூ 20 லட்சமும்  செலவாகும்.

      பிரதமரின் வேலை உருவாக்கத் திட்டத்தின் கீழ் 2018 - 19ல் 5,87,416ஆக இருந்த வேலை உருவாக்கம் 2021-22ல் 8,25,752ஆக இருந்தது இது நாற்பது சதவீதம் அதிகமாகும்.

***

AP/SMB/JJ/RR



(Release ID: 1898792) Visitor Counter : 103


Read this release in: English , Urdu , Punjabi , Telugu