நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-23-ம் நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் ரூ. 15.67 லட்சம் கோடி - கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 10-02-2023 வரை மொத்த வசூல் 24.09 சதவீதம் அதிகம்

Posted On: 11 FEB 2023 12:34PM by PIB Chennai

பிப்ரவரி 10, 2023 வரையிலான நேரடி வரி வசூல்களின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைக் காட்டுகின்றன. பிப்ரவரி 10, 2023 வரையிலான  மொத்த நேரடி வரி வசூல்,  ரூ.15.67 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 24.09 சதவீதம் அதிகமாகும். வரிசெலுத்துவோருக்கு திருப்பி அளிக்கப்பட்ட நிகர தொகை தவிர்த்த நேரடி வரி வசூல், ரூ. 12.98 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் நிகர வசூலை விட 18.40 சதவீதம் அதிகமாகும். இந்த வரி வருவாய்த் தொகையானது, 2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் 91.39 சதவீதம் ஆகும் மற்றும் 2022-23ம் நிதி ஆண்டுக்கான நேரடி வரிகளின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது 78.65 சதவீதம் ஆகும்.

 

மொத்த வருவாய் அடிப்படையில் கார்ப்பரேட் வருமான வரி (சிஐடி) மற்றும் தனிநபர் வருமான வரி (பிஐடி) ஆகியவற்றின் வளர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை, சிஐடி-யின் வளர்ச்சி விகிதம் 19.33 சதவீதம் ஆகவும், பிஐடி-யின் (பங்கு பரிவர்த்தனை வரியான எஸ்டிடி உட்பட) வளர்ச்சி விகிதம் 29.63 சதவீதம் ஆகவும் உள்ளது. வரி செலுத்துவோருக்கிப் பணத்தைத் திருப்பி அளித்தல் தொடர்பான சரிசெய்தலுக்குப் பிறகு, சிஐடி வசூலில் நிகர வளர்ச்சி 15.84 சதவீதம் ஆகவும், பிஐடி வசூலில் வளர்ச்சி 21.93 சதவீதம் ஆகவும் (பிஐடி மட்டும்), எஸ்டிடி உள்ளிட்ட பிஐடி வளர்ச்சி 21.23 சதவீதம் ஆகவும் உள்ளது.

 

ஏப்ரல் 1, 2022 முதல் பிப்ரவரி 10, 2023 வரை ரூ. 2.69 லட்சம் கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் திருப்பி வழங்கப்பட்ட பணத்தை விட 61.58% அதிகமாகும்.

***

PKV / PLM / DL


(Release ID: 1898297) Visitor Counter : 405