சுரங்கங்கள் அமைச்சகம்
இந்திய புவியியல் ஆய்வு மையம் 2023-24-ல் 111 பொது சுகாதாரம் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த புவிஅறிவியல் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது
Posted On:
11 FEB 2023 9:36AM by PIB Chennai
சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய புவியியல் ஆய்வு மையம், 2023-24-ம் ஆண்டில் 111 பொது சுகாதாரம் மற்றும் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த புவிஅறிவியல் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.
2023-24-ம் ஆண்டில் ஐந்து முக்கிய இயக்கப்பணிகளின் கீழ், மொத்தம் 966 முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்த இந்திய புவியியல் ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. ராஜாங்க ரீதியிலான முக்கிய மற்றும் உர கனிமங்கள் ஆய்வுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அடிப்படை தரவு உருவாக்கம் மற்றும் கனிம ஆய்வு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மேற்கூறியவற்றைத் தவிர, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புவியியலாளர்கள் உட்பட அதன் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த மற்ற அதிகாரிகளின் பயிற்சி மற்றும் திறனை வளர்ப்பதற்காக 115 படிப்புகளை இந்திய புவியியல் ஆய்வு மையம் மேற்கொள்ளும்.
கடந்த 1851-ல் நிறுவப்பட்ட இந்திய புவியியல் ஆய்வு மையம், உலகின் பழமையான கணக்கெடுப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக, இந்திய புவியியல் ஆய்வு மையம், பல்வேறு புவிஅறிவியல் தொடர்பான நடவடிக்கைகளில் தொடர்ந்து பன்முகத்தன்மையோடு வளர்ச்சியடைந்து, புவிஅறிவியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது.
***
PKV / GS / DL
(Release ID: 1898296)
Visitor Counter : 180