நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கோதுமை, மைதா போன்றவற்றின் விலையை குறைப்பதற்காக 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை வெளிச்சந்தை திட்டம் மற்றும் மாநில அரசுகள் கேந்திரிய பந்தர், தேசிய நுகர்வோர் கூட்டுறவு அமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு மற்றும் மாநில கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு
Posted On:
10 FEB 2023 2:43PM by PIB Chennai
கோதுமை, மைதா போன்றவற்றின் விலையை குறைப்பதற்காக 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை வெளிச்சந்தை திட்டம் மற்றும் மாநில அரசுகள் கேந்திரிய பந்தர், தேசிய நுகர்வோர் கூட்டுறவு அமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு மற்றும் மாநில கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நுகர்வோர் நலத்துறை உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் தெரிவித்தார்.
தொடர்ந்து அதிகரித்து வரும் உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அவ்வப்போது பொருட்களின் கையிருப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். உணவு பொருட்களை கையிருப்பு வைத்துக் கொள்வதற்கான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதுடன், கையிருப்பை ஆய்வு செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக உணவு பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அதனை நிலைநாட்டுவதற்கு ஏதுவாக ஏற்றுமதி கொள்கையில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, உணவு தானியங்களின் விலையை கட்டுப்படுத்துவதற்காக கோதுமை இறக்குமதி கொள்கையில் (2022, மே 13-ம் தேதி) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குருணை அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்திருப்பதுடன், பாசுமதி அரிசி தவிரி மற்ற புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
பருப்பு வகைகளின் உள்நாட்டு கையிருப்பை சமன் செய்வதற்கு ஏதுவாக உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை 31.03.2024 வரை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பருப்பு வகைகளின் பதுக்கலைத் தடுக்க, அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் வர்த்தகர்களின் சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்ய, அறிவுறுத்தப்பட்டுள்ளன.
***
SMB/ES/UM/RR
(Release ID: 1897962)
Visitor Counter : 139