பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினப் பகுதிகளின் மாவட்ட ஆட்சியர்கள், திட்ட அதிகாரிகளுக்கு சிறந்த நிர்வாகம் குறித்த பயிலரங்கிற்கு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 FEB 2023 6:20PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள குடிமைப்பணி அதிகாரிகள் மையத்தில் பழங்குடியினப் பகுதிகளின் மாவட்ட ஆட்சியர்கள், திட்ட அதிகாரிகளுக்கு சிறந்த நிர்வாகம் குறித்த பயிலரங்கிற்கு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் நாளை (பிப்ரவரி 10, 2023) ஏற்பாடு செய்துள்ளது.  இப்பயிலரங்கில், நாடு முழுவதும் உள்ள பழங்குடியின பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் திட்ட அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கொள்கை மற்றும் அமலாக்கம் குறித்து தங்களது அனுபவங்களை பகிர்வதுடன், பரிந்துரைகளையும், கருத்துக்களையும் அளிக்க உள்ளனர்.

மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா இந்நிகழ்ச்சியில், தலைமை விருந்தினராக கலந்துகொண்டு, அவரது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள உள்ளார்.

 

***

AP/IR/RS/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1897813) வருகையாளர் எண்ணிக்கை : 195
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi