சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, உயிரி பன்முகத்தன்மை மேம்பாடு குறித்த நிகழ்வுகளுக்கிடையே முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த பருவநிலை பணிக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது

Posted On: 09 FEB 2023 1:16PM by PIB Chennai

சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, உயிரி பன்முகத்தன்மை மேம்பாடு குறித்த நிகழ்வுகளுக்கிடையே  முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த பருவநிலை பணிக்குழுவின் ஆலோசனைக்  கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது

இக்கூட்டத்தில் பேசிய சுற்றுச்சூழல் வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் திரு சந்திர பிரகாஷ் கோயல், பொருளாதாரம், நிதி, சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களில் ஜி20 நாடுகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து தெரிவித்தார். கடந்த காலங்களில் ஜி20 தலைமைத்துவத்தின் போது, மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளை ஒருங்கிணைந்து முன்னெடுத்து செல்வது என்பதை இந்தியா கவனத்தில் வைத்துள்ளதாக  கூறினார்.

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்குழுமத்தின் தலைமை இயக்குநர் திரு ஏ எஸ் ராவத், வனத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகள், சுரங்கம்  மறுசீரமைத்தல் தொடர்பாக விவாதித்தார்.

                                                                                                           *** 

AP/IR/RS/KPG

(Release ID: 1897680) Visitor Counter : 187