பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பணிபுரியும் பெண்களின் குழந்தைகளுக்காக நாடு முழுவதும் 494 பாதுகாப்பு காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன

Posted On: 08 FEB 2023 4:46PM by PIB Chennai

சக்தி நிவாஸ் என்றழைக்கப்படும்  பணிபுரியும் பெண்களுக்கான  விடுதிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நேரடியாக அளிக்கிறது.   அதன் அடிப்படையில், பணிபுரியும் பெண்களின் குழந்தைகளுக்காக  நாடு முழுவதும்  494 பாதுகாப்பு காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன

இவற்றில் தமிழ்நாட்டில் 54 விடுதிகளும், புதுச்சேரியில் 3 விடுதிகளும் செயல்படுகின்றன.

தமிழ்நாட்டுக்கு கடந்த 2020-21-ம் நிதியாண்டில் இவ்விடுதிகளுக்காக ரூ.392.18  லட்சம்  வழங்கப்பட்டதில்   அத்தொகை முழுவதும் பயன்படுத்தப்பட்டது. 2021-22-ம் நிதியாண்டில் ரூ.350.25 லட்சம் வழங்கப்பட்டது. அத்தொகை முழுவதும் பயன்படுத்தப்பட்டது.

இத்தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி  மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897358

 

***

AP/IR/KPG/GK


(Release ID: 1897449) Visitor Counter : 172


Read this release in: English , Urdu , Manipuri , Telugu