சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள சுகாதார வசதிகள்

Posted On: 07 FEB 2023 3:25PM by PIB Chennai

நாட்டின் சுகாதார அமைப்பானது, துணை சுகாதார மையம் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்), ஆரம்ப சுகாதார நிலையம் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்), சமூக சுகாதார மையம் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்) ஆகிய மூன்று அடுக்கு அமைப்பை உள்ளடக்கியது.  நிறுவப்பட்ட விதிமுறைகளின்படி, கிராமப்புறங்களில் 20,000 மக்கள் தொகை, (மலைப்பகுதி மற்றும் பழங்குடியினர் பகுதிகளில்), 30,000 (சமவெளிகளில்) மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வேண்டும்.  5,000 (சமவெளியில்) மற்றும் 3000 (மலை மற்றும் மலைப்பகுதிகளில்) மக்கள் தொகைக்கு துணை மையம் நிறுவப்பட வேண்டும்.  1,20,000 (சமவெளியில்) மற்றும் 80,000 (மலை மற்றும் பழங்குடியினர் பகுதியில்) மக்கள்தொகைக்கான சமூக சுகாதார மையம் அமைக்கப்படுகிறது.

கிராமப்புற சுகாதார புள்ளிவிவரங்கள்  என்பது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் அறிவிக்கப்பட்ட சுகாதார நிர்வாகத் தரவுகளின் அடிப்படையில் ஒரு வருடாந்திர வெளியீடு ஆகும்.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்,  அமலாக்கத் திட்டங்கள்  வடிவில் பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில்,  மனித வள அடிப்படையில்  பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்குகிறது.

தேசிய சுகாதார இயக்கத்தின்  முக்கிய முயற்சிகளில் ஜனனி ஷிஷு சுரக்ஷா காரியக்ரம் , ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் ), இலவச மருந்துகள் மற்றும் இலவச நோயறிதல் சேவை முன்முயற்சிகள், தேசிய டயாலிசிஸ் திட்டம் மற்றும் தேசிய தர உத்தரவாதக் கட்டமைப்பை செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும். தேசிய சுகாதார இயக்கத்தின்  ஒத்துழைப்பில், தாய்வழி சுகாதாரம், குழந்தை ஆரோக்கியம், இளம்பருவ சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு, உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் மற்றும் காசநோய், எச்ஐவி/எய்ட்ஸ், மலேரியா, டெங்கு  போன்ற கொசுக்கள் மூலம்  பரவும் நோய்களுக்கான இலவச சேவைகள் வழங்கப்படுகின்றன.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் இன்று மாநிலங்களையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத்  தெரிவித்துள்ளார்.

***



(Release ID: 1897052) Visitor Counter : 124


Read this release in: English , Urdu , Telugu