ஆயுஷ்
மருத்துவத் தாவரங்களை பயிரிடும் போது, அதிக மகசூல் பெறுவதற்கான நல்ல வேளாண் முறைகளை பின்பற்ற விவசாயிகளுக்கு பயிற்சியை வழங்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
Posted On:
07 FEB 2023 3:48PM by PIB Chennai
மருத்துவத் தாவரங்களை பயிரிடும் போது, அதிக மகசூல் பெறுவதற்கான நல்ல வேளாண் முறைகளை பின்பற்ற விவசாயிகளுக்கு பயிற்சியை வழங்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ தாவர வாரியமானது மருத்துவத் தாவரங்கள் நிலையான மேலாண்மை, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய துறைத் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் மூலம் கல்வி, தகவல், பரிமாற்றம் நடவடிக்கையின் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துறை சார்ந்த பயணங்கள் திறன் மேம்பாட்டு நடடிவக்கைகளை மேற்கொள்ள நிதி ஆதாரங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
தேசிய மருத்துவத் தாவர வாரியம் 126 திட்டங்களுக்கு நிதி உதவி செய்து, மருத்துவத் தாவர சாகுபடிக்குப் பல்வேறு வகையில் பயனளித்து வருகிறது. கடந்த 2017-18 முதல் 2021-2022 ஆண்டுக் காலகட்டத்தில் இந்தத் திட்டத்திற்கான பட்ஜெட் ரூ.3079.116 லட்சமாகும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1896966
***
AP/GS/RJ/GK
(Release ID: 1897027)
Visitor Counter : 230