உள்துறை அமைச்சகம்
மகளிர் பாதுகாப்பு
Posted On:
07 FEB 2023 4:33PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்பு சட்டம் அட்டவணை 7-ன்படி, காவல் மற்றும் பொது ஆணை மாநிலங்களுக்கான வரையறையில் வருவதால், மகளிரின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பேணி காப்பது, மாநிலங்களின் கடமை என மத்திய உள்துறை இணையமைச்சர் திரு அஜய்குமார் மிஸ்ரா கூறியுள்ளார்.
மகளிரின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், மகளிருக்கு எதிரான குற்றம் மற்றும் அது குறித்த புலனாய்வை மேற்கொள்ள மாவட்ட அளவில் புலனாய்வு மையங்களை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் அதன் அடிப்படையில் 2015 முதல் 2017 வரை நாடு முழுவதும் 150 மகளிருக்கு எதிரான குற்றங்களை புலனாய்வு செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கான நிதியுதவியை தலா 18 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் 7 புலனாய்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு புலனாய்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் திரு மிஸ்ரா, நாடு முழுவதும் மகளிருக்கு எதிரான குற்றங்களை பதிவு செய்ய 13,101 காவல் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1896986
***
AP/UM/GK
(Release ID: 1897002)
Visitor Counter : 158