கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கங்காவிலாஸ்- நீளமான முதல் நதிநீர் கப்பல் வாரணாசியிலிருந்து அசாமின் திப்ருகார்க் வரையிலானபயணம் தொடங்கப்பட்டு இருப்பதன் விளைவாக நீர் போக்குவரத்துக்கு ஊக்குவிப்பு

प्रविष्टि तिथि: 07 FEB 2023 2:28PM by PIB Chennai

கங்கா விலாஸ்- நீளமான முதல் நதிநீர் கப்பல் வாரணாசியிலிருந்து அசாமின் திப்ருகார்க் வரையிலான பயணம் தொடங்கப்பட்டு இருப்பது, நதிநீர் போக்குவரத்து துறைக்கு ஊக்குவிக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது என்று  மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு மே 14-15 தேதிகளில் மும்பையில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மாநாடு நடந்தது.  அதில் உலகளவில் சிறந்து விளங்கும் கப்பல்களை இயக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையமானது, நீர்வழிப் போக்குவரத்துக்கு உதவுதல், படகுத் துறை அமைத்தல் மற்றும் எதிர்கால திட்டமிடல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1896933

***

AP/GS/RJ/GK


(रिलीज़ आईडी: 1896992) आगंतुक पटल : 149
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Manipuri , Telugu