கூட்டுறவு அமைச்சகம்
கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்ட பிறகு, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் விளைவாக, நம் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்தியாவின் கூட்டுறவு கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது
Posted On:
07 FEB 2023 1:52PM by PIB Chennai
புதிய தேசிய கூட்டுறவுக் கொள்கையை வடிவமைக்க கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி அன்று, திரு சுரேஷ் பிரபாகர் பிரபு தலைமையின் கீழ் தேசிய அளவிலான குழு அமைக்கப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் இன்று, கூட்டுறவுத் துறைக்கு தேசிய கொள்கை வகுத்தல் குறித்து எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா பதிலளித்துள்ளார். மேலும் அவர், அந்த குழுவில் கூட்டுறவுத் துறை நிபுணர்கள், தேசிய/ மாநில/ மாவட்ட/ ஆரம்ப கட்ட கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள், செயலாளர்கள், மத்திய அமைச்சகங்கள்/ துறைகள் போன்றவற்றைச் சேர்ந்தவர்கள் இந்த குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர். ‘ஒத்துழைப்பின் மூலம் செழிப்பு’ என்ற நோக்கத்தை அடைவதற்கு புதிய தேசிய கூட்டுறவுக் கொள்கை வடிவமைப்பது முக்கியமானதாகும். ஒத்துழைப்புடன் கூடிய பொருளாதார மேம்பாட்டு மாதிரியை ஊக்குவிப்பதன் மூலம் நம் நாட்டில் உள்ள கூட்டுறவு நடவடிக்கைகளை வலுப்படுத்தி அதன் பயன்பாட்டை அடிப்படை நிலையிலும் சேர்க்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது என்று கூறினார்.
அந்தக் குழுவானது மதிப்பீட்டுத் தொகுப்பு, கொள்கை தொடர்பான ஆலோசனைகள், பரிந்துரைகள் போன்றவற்றை ஆய்வு செய்து புதிய கொள்கை வடிவமைப்பில் ஈடுபடும் என்றார்.
கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்ட பிறகு, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் விளைவாக, நம் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்தியாவின் கூட்டுறவு கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1896924
***
AP/GS/RJ/GK
(Release ID: 1896957)
Visitor Counter : 323