வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்தை ஏற்று செயல்படுவதில் சமூகத் துறை அமைச்சகங்கள் / துறைகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) ஆய்வு செய்தது

Posted On: 04 FEB 2023 10:35AM by PIB Chennai

பிரதமரின் விரைவுசக்தி தேசியப் பெருந்திட்டத்தை செயல்படுத்துவதில் சமூகத் துறை அமைச்சகங்கள் / துறைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கான கூட்டம் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி), சரக்குப் போக்குவரத்துப் பிரிவு சிறப்புச் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது.

கூட்டத்தில் 14 அமைச்சகங்கள் / துறைகளைச் சேர்ந்த 35 மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பஞ்சாயத்து ராஜ் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, உயர் கல்வித் துறை, கலாச்சார அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பழங்குடியினர் விவகார அமைச்சகம், இளைஞர் விவகாரத் துறை, விளையாட்டுத் துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவற்றில் இருந்தும் பிசாக் - என் நிறுவனம், நித்தி ஆயோக் அமைப்பு ஆகியவற்றில் இருந்தும் இக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்தில், பேசிய சிறப்புச் செயலாளர், பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் முக்கியத்துவத்தையும், உள்கட்டமைப்பு மற்றும் சமூகத் துறை திட்டங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றில் அது ஆற்றக்கூடிய பங்கையும் எடுத்துரைத்தார். கடந்த கூட்டத்திற்குப் பிறகு சமூகத் துறை அமைச்சகங்கள் / துறைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இக்கூட்டத்தில் பாராட்டப்பட்டது.

சமூகத் துறை அமைச்சகங்கள்/துறைகள் இந்த பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்ட செயல்பாடுகளில் அடைந்துள்ள முன்னேற்றம், திட்டமிடல், மேம்பாடு மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தனித்தனியாக விவாதிக்கப்பட்டன.

                                                      ------------------ 

PKV/PLM/KPG



(Release ID: 1896285) Visitor Counter : 111


Read this release in: English , Urdu , Hindi , Marathi