பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023 ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,25,992 குறைகளுக்கு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தீர்வு கண்டுள்ளன

प्रविष्टि तिथि: 02 FEB 2023 4:45PM by PIB Chennai

நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர் துறை, பரவலாக்கப்பட்ட பொது மக்கள் குறை தீர்வு மற்றும் கண்காணிப்பு முறைமை 2023 ஜனவரி மாதத்திற்கான மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குறைகளின் வகைகள், தீர்வு காணப்பட்ட விதம் ஆகியவை  குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன. துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜனவரி மாதத்தில் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் மொத்தம் 1,25,992 குறைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. விண்ணப்பத்திற்கு சராசரியாக 19 நாட்களில் தீர்வு கிட்டியுள்ளது.  நிலுவையில் உள்ள வழக்குகள் 67,283. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு  குறைந்த அளவாகும். பொதுசேவை மையங்கள் மூலம் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை 66 சதவீத குறைகள் குறித்த மனுக்களை பெற்றுள்ளன.

***

PKV/AG/RJ


(रिलीज़ आईडी: 1895804) आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi