உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உதான் திட்டத்தின் கீழ் 459 வழித்தடங்களில் 72 விமான நிலையங்கள், 9 ஹெலிகாப்டர் தரையிறங்கு தளம், நீரில் செல்லக்கூடிய 2 விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன

Posted On: 02 FEB 2023 4:04PM by PIB Chennai

கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி சிவில் போக்குவரத்து அமைச்சகம், பிராந்திய இணைப்புத் திட்டத்தை தொடங்கி நாட்டில் சிறிய நகரங்களிலும், விமானங்களை இயக்கும் வகையிலும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவலை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் (ஓய்வு) இன்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். குறைந்த செலவில் விமானப் போக்குவரத்து சேவையை அனைத்து மக்களும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட உதான் திட்டம் தற்போது தேவை அதிகமுள்ள வழித்தடங்களில் சேவைகளைத் தொடங்க விருப்பமுள்ள விமான நிறுவனங்கள், இது தொடர்பான ஏல நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதான் திட்டத்தின் கீழ் 459 வழித்தடங்களில் 72 விமான நிலையங்கள், 9 ஹெலிகாப்டர் தரையிறங்குத் தளம், நீரில் செல்லக்கூடிய 2 விமானங்கள் போன்றவை இந்தாண்டு ஜனவரி 30ல் செயல்பட ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த சேவைகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் சுமார் 2.16 இலட்ச உதான் விமான சேவைகளில் 1.13 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

*******

AP/GS/SG/RJ                       



(Release ID: 1895795) Visitor Counter : 204