உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் இடையேயான விமானப் போக்குவரத்து சேவையை சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஜோதிராதித்யா சிந்தியா தொடங்கி வைத்தார்
Posted On:
02 FEB 2023 3:21PM by PIB Chennai
ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் இடையேயான விமானப் போக்குவரத்து சேவையை சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஜோதிராதித்யா சிந்தியா, இணை அமைச்சர் ஜெனரல் டாக்டர்.விஜயகுமார் சிங் (ஓய்வு) ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு.ஜோதிராதித்ய சிந்தியா, "நாட்டின் இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் விமானப் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தில்லி-ஆக்ரா-ஜெய்ப்பூர் தங்க முக்கோண சுற்றுலாப் பாதையை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்தப் புதிய விமானப் போக்குவரத்து சேவை அமையும். உலகளவில் 3வது பெரிய போக்குவரத்து சேவைகளை உள்ளடக்கிய உள்ளூர் விமானப் போக்குவரத்து சந்தை மற்றும் உலகளவில் 7வது பெரிய போக்குவரத்து சேவைகளை உள்ளடக்கிய சர்வதேச மற்றும் உள்ளூர் விமானப் போக்குவரத்து சந்தைகளில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார்.
இராஜஸ்தான் மாநிலத்தில் விமானப்போக்குவரத்து துறை உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், ஜோத்பூர் விமான நிலையத்திற்கு புதிய முனையக் கட்டடத்தை விரைவில் திறக்கவிருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு.நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ் கடந்த 2014ம் ஆண்டிலிருந்து இராஜஸ்தானின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது, என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணலாம். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1895720
***
AP/GS/SG/RR
(Release ID: 1895749)