நிதி அமைச்சகம்
கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியிருப்பதை பொருளாதார ஆய்வறிக்கை 2022-23 எடுத்துரைக்கிறது: சுகாதார சேவைகளில் சிறப்பான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது
Posted On:
31 JAN 2023 1:32PM by PIB Chennai
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியிருப்பதை எடுத்துரைக்கிறது. அரசின் அடிப்படை வசதிகள் தொடர்பான கொள்கைகள், சிறப்பாக திட்ட அமலாக்கம் போன்றவை இதற்கு காரணமாக அமைந்துள்ளன.
தேசிய குடும்ப நல ஆய்வு 2019-21ன் அடிப்படையில், சுகாதாரம் மற்றும் தாய்-சேய் நலம் வகிதங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் ஆண், பெண் விகிதம் ஆயிரத்திற்கு 927-ல் இருந்து 931-ஆக அதிகரித்துள்ளது. சிசு மரணம் விகிதம் 46-ல் இருந்து 38.4 ஆக குறைந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் முறையான சுகாதார நிலையங்களில் குழந்தை பிறப்பு விகிதம் 75.1-லிருந்து 86.7-ஆக அதிகரித்துள்ளது. 12 முதல் 23மாத குழந்தைகளுக்கு அனைத்து விதமான தடுப்பூசிகளையும் செலுத்தும் விகிதம் 61.3-லிருந்த 84 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1894909
AP/PLM/RS/GK
***
(Release ID: 1895141)
Visitor Counter : 205