தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழாவில் 'அனிமேஷனைப் பயன்படுத்தி எல்லையற்ற உலகங்களை உருவாக்குதல்' பற்றிய குழு விவாதம் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 28 JAN 2023 4:10PM by PIB Chennai

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழாவின் முதல் நாளான இன்று 'அனிமேஷனைப் (இயக்கமூட்டல் தொழில்நுட்பம்) பயன்படுத்தி எல்லையற்ற உலகங்களை உருவாக்குதல்' என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. கிராஃபிட்டி மல்டிமீடியாவின் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி திரு. முஞ்சால் ஷ்ராஃப், டூன்ஸ் அனிமேஷனின் தலைமைச் செயல் அதிகாரி திரு. ஜெயக்குமார் பிரபாகரன் ஆகியோர் இந்திய அனிமேஷன் துறையில் பணிபுரிந்த அனுபவத்தையும் அதன் வளர்ச்சிக்கான தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

 

திரு. முஞ்சல் ஷ்ராஃப் தனது சொந்த படைப்பான 'தீபா அண்ட் அனூப்' பற்றி விவாதித்தார். சர்வதேச பார்வையாளர்களை இந்திய சூழலுடன் இணைப்பதே இந்தத் தொடரை உருவாக்குவதற்கான முக்கிய உந்துதலாக அமைந்தது என்று அவர் கூறினார். ஜெயக்குமார் பிரபாகரன் அனிமேஷன் உள்ளடக்கத்தின் சமூகப் பரிமாணங்களை எடுத்துரைத்தார். கார்ட்டூன்களில் இருந்து குழந்தைகள் எப்படி பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள் என்று அவர் விளக்கினார்.

 

இந்த அமர்வில் இந்திய நாட்டுப்புறக் கதைகள் உலக அளவில் பார்வையாளர்களின் கவனத்தை எவ்வாறு ஈர்த்தது என்பது பற்றிய விவாதங்களும் நடைபெற்றன. விஸ்லிங் வூட்ஸ் இன்டர்நேஷனலின் துணைத் தலைவர் திரு சைதன்யா சின்சில்கரால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்த விவாதம் இந்திய அனிமேஷன் துறையின் வளர்ச்சியையும் அதன் எதிர்காலத்தையும் பற்றி விரிவாக ஆராய்ந்தது.

*****

 

PLM / DL


(रिलीज़ आईडी: 1894350) आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi , Kannada