மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஆதார் எண்ணுடன் கூடிய மின்னணு வழியிலான 'உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' மூலம் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்கள் 18.53 சதவீதம் உயர்ந்து 84.8 கோடியை எட்டியுள்ளது

Posted On: 27 JAN 2023 11:09AM by PIB Chennai

இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஆதார் எண்ணுடன் கூடிய மின்னணு  வழியிலான 'உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்சேவை மூலம் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்கள் 18.53 சதவீதம் உயர்ந்து 84.8 கோடியை எட்டியுள்ளது

டிசம்பர் மாதத்தில் மட்டும், ஆதார் எண்ணுடன் கூடிய மின்னணு  வழியிலான 'உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்சேவை மூலம் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்கள் 13 சதவீதம் உயர்ந்து 32.49 கோடியை எட்டியுள்ளது.  

ஆதார் எண்ணுடன் கூடிய மின்னணு  வழியிலான 'உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' சேவையானது, வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான, எளிமையான, மிகவும் பயனுள்ள வகையில் குறிப்பாக வங்கி மற்றும் வங்கியல்லாத நிதி சேவை வசதிகளை சிறப்பான முறையில் வழங்கி வருகின்றது.

அக்டோபர் மாதத்தில் ஆதார் எண்ணுடன் கூடிய மின்னணு  வழியிலான 'உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' சேவை மூலம் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்கள் 23.56 கோடியாகவும், நவம்பர் மாதத்தில் 28.75 கோடியாகவும் உயர்ந்திருப்பதன் மூலம் அதன் பயன்பாட்டில் குறிப்பாக பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

**********

AP/GS/PK/KRS(Release ID: 1894098) Visitor Counter : 197