நிலக்கரி அமைச்சகம்
எம்-சாண்ட் திட்டத்தை பெரிய அளவில் தொடங்குகிறது இந்திய நிலக்கரி நிறுவனம்
Posted On:
27 JAN 2023 11:02AM by PIB Chennai
சுரங்கம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1957-ன் கீழ், மணல் சிறு கனிமமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிறு கனிமங்களின் நிர்வாக கட்டுப்பாடு மாநில அரசுகளின் கையில் உள்ளது. அதன்படி குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் மாநிலங்கள் அதனை ஒழுங்குமுறைப்படுத்தியுள்ளன. மிக அதிகத் தேவை, கட்டுப்படுத்தப்பட்ட விநியோகம், ஆற்று நீர் சூழலைப் பாதுகாக்க மழை காலத்தில் மணல் வாருவதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது ஆகிய காரணங்களால் ஆற்று மணலுக்கு மாற்று கண்டுபிடிப்பது அவசியமாகி உள்ளது. கனிம வள அமைச்சகம் தயாரித்துள்ள மணல் குவாரி கட்டமைப்பு, எம்-சாண்ட் எனப்படும் உற்பத்தி செய்யப்படும் மணலுக்கு மாற்று ஆதாரங்களை வகுத்துள்ளது. அதன்படி பாறைகளைப் பொடியாக அரைத்து இந்த மணல் தயாரிக்கப்படுகிறது.
எம்-சாண்ட் தயாரிப்பதில் ஏற்படும் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்க, கோல் இந்தியா லிமிடெட் எனப்படும் இந்திய நிலக்கரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழலுக்கு தாக்கம் ஏற்படுத்தாத வகையிலும் எம்-சாண்ட் தயாரிப்பை ஊக்குவிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தரமான எம்-சாண்ட் உற்பத்தியை ஊக்குவிக்க 2024 ஆம் ஆண்டுக்குள் 5 எம்-சாண்ட் தயாரிப்பு தொழிற்சாலைகளை உருவாக்க இந்திய நிலக்கரி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
***
PKV/RR/KRS
(Release ID: 1894068)
Visitor Counter : 209