சுற்றுலா அமைச்சகம்

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் 2023 ஜனவரி 26 முதல் 31-ம் தேதி வரை செங்கோட்டையின் புல்வெளிகளில் ஆறு நாள் மாபெரும் நிகழ்வான “பாரத் பர்வ்” நிகழ்ச்சியை நடத்த உள்ளது

Posted On: 25 JAN 2023 1:02PM by PIB Chennai

சிறப்பம்சங்கள்:

மண்டல கலாச்சார மையங்கள் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து கலாச்சாரக் குழுக்களின் கலாச்சார நிகழ்ச்சிகள், இந்தியா முழுவதுமுள்ள உணவு வகைகள், 65 கைவினைப்பொருட்கள் அரங்குகள் ஆகியவற்றின் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கும்.

குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக 2023 ஜனவரி 26 முதல் 31-ம் தேதி வரை டெல்லி செங்கோட்டைக்கு எதிரே உள்ள புல்வெளிகள் மற்றும் கியான் பாதையில் ஆறு நாள் மாபெரும் நிகழ்வான “பாரத் பர்வ்” நிகழ்ச்சியை மத்திய அரசு ஏற்பாடு செய்யவுள்ளது.

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்வில், குடியரசு தின அணிவகுப்பின் சிறந்த ஊர்தியின் அணிவகுப்பு, மண்டல கலாச்சார மையங்கள் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கலாச்சார குழுக்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தியா முழுவதுமுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் 65 கைவினைப் பொருட்கள் அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சி, 2023 ஜனவரி 26-ம் தேதி  மாலை 5:30 மணிக்குத் தொடங்கி, ஜனவரி 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னதாக “பாரத் பர்வ்” நிகழ்வு, 2016 முதல் 2020 வரை செங்கோட்டைக்கு முன்னால் உள்ள புல்வெளிகள் மற்றும் கியான் பாதையில் நடைபெற்றது. (2021-ம் ஆண்டில் மெய்நிகர் வாயிலாக நடைபெற்றது).

 ***

(Release ID: 1893529)



(Release ID: 1893595) Visitor Counter : 141