பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

மெத்தனால் கலந்த டீசலில் இயங்கும் உள்நாட்டு கப்பலின் வெள்ளோட்டத்தை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்

Posted On: 24 JAN 2023 12:21PM by PIB Chennai

பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023 நடைபெற உள்ளதை முன்னிட்டு மெத்தனால் கலந்த டீசலில் இயங்கும் உள்நாட்டு கப்பலின் வெள்ளோட்டத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெளி கலந்து கொண்டார்.

மெத்தனால் என்பது நிலக்கரி சாம்பல், விவசாயக் கழிவு, அனல் மின் நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றிலிருந்து கரியமில வாயு உற்பத்தி செய்யப்படும் குறைந்த கார்பன் ஹைட்ரஜன் கலந்த எரிப்பொருளாகும். சி.ஓ.பி 21 மாநாட்டில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பூர்த்தி செய்வதற்கான மிகச் சிறந்த வழி, இது.

பெட்ரோல் மற்றும் டீசல் உடன் ஒப்பிடுகையில் சற்று குறைவான எரிசக்தி திறனை மெத்தனால் பெற்றுள்ள போதிலும், போக்குவரத்து துறை (சாலை, ரயில் மற்றும் நீர் வழி), எரிசக்தி துறை (டிராக்டர்கள், வணிக வாகனங்கள் முதலியவை) மற்றும் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி., மண்ணெண்ணெய் மற்றும் மரத்தின் கரி) ஆகியவற்றின் மாற்று எரிபொருளாக மெத்தனாலை பயன்படுத்தலாம்.

இன்று செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், அசாமில் உள்ள அசாம் பெட்ரோகெமிக்கல் நிறுவனம், தற்போது நாளொன்றுக்கு 100 டன் மெத்தனாலை உற்பத்தி செய்வதாகவும், 500 டன் மெத்தனாலை உற்பத்தி செய்யும் புதிய திட்டத்தை அமல்படுத்தி வருவதாகவும் கூறினார். ஐதராபாத் மற்றும் திருச்சி பெல் நிறுவனம், தெர்மாக்ஸ் மற்றும் தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள உள்ளூர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலக்கரியில் இருந்து மெத்தனாலை உருவாக்கும் ஆலைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

***

(Release ID: 1893191)

AP/RB/KRS



(Release ID: 1893239) Visitor Counter : 212