சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
டாவோசில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை முறை அறிவியலில் புதுமைக் கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பிலான வட்டமேசை விவாதத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரை
Posted On:
18 JAN 2023 5:07PM by PIB Chennai
இந்தியாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாரம்பரிய மருந்துகளை நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைத்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அண்மையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
டாவோசில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை முறை அறிவியலில் புதுமைக் கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பிலான வட்டமேசை விவாதத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார். இந்திய வாழ்க்கை முறை அறிவியல் உலக அளவில் முக்கியத்துவம் பெற்று விளங்குவதாக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளூர் மற்றும் உலக சந்தைகளில் எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் ஆயுஷ்மான் பாரத் - மக்கள் ஆரோக்கியம், மக்கள் மருந்தகம் உள்ளிட்ட திட்டங்கள் மருந்து மற்றும் மருத்துவ தொழில்நுட்பத் துறைகளில் வாய்ப்புகளை அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். மருத்துவ உபகரணங்கள் துறையை உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகக் கூறிய அவர், 5 ஆண்டுகளில் 50% ஆண்டு வளர்ச்சியை இத்துறை அடைந்துள்ளது என்றார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையில் இந்தியா தற்சார்பை எட்டும் என்று திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
***
IR/PLM/KPG/KRS
(Release ID: 1892026)
Visitor Counter : 176