சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மனுக்கள் மீதான விசாரணை மற்றும் தீர்வு
Posted On:
18 JAN 2023 4:28PM by PIB Chennai
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு கடந்த ஒரு மாதத்தில் 168 மனுக்கள் வந்துள்ளன. இவற்றில் 73-க்கு தீர்வு காணப்பட்டு, பைசல் செய்யப்பட்டன. எஞ்சிய 95 வழக்குகளில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு முழுவதும் 1895 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 1422-க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
01.12.2022 முதல் 17.01.2023 வரை தேசிய சிறுபான்மையினர் ஆணையம் 15 விசாரணைகளை நடத்தியுள்ளது. பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வுகாணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் 40 விசாரணைகள் ஆணையத்தில் நடைபெற்றுள்ளன.
***
(Release ID: 1891967)
PKV/AG/KRS
(Release ID: 1891977)
Visitor Counter : 153