வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்: டிசம்பர் 2022

Posted On: 16 JAN 2023 5:44PM by PIB Chennai

இந்தியாவின் வர்த்தகம்,  சேவைத்துறை இரண்டையும் சேர்த்து ஒட்டுமொத்த வெளிநாட்டு வர்த்தகம், 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 16.11% அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் உள்ளூர் தேவைகள் அதிகரித்ததன் காரணமாக இறக்குமதியும் 25.55% அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு ரிசர்வ் வங்கியின் அடுத்த புள்ளிவிவர வெளியீட்டின் அடிப்படையில் திருத்தப்பட்டு வெளியிடப்படும். 

இந்த காலகட்டத்தில் வர்த்தகம் மற்றும் சேவைத்துறை ஏற்றுமதி 568.57 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில், நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி 686.70 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தக ஏற்றுமதி இந்த காலகட்டத்தில் 332.76 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 305.04 பில்லியன் டாலராக இருந்தது.

2022, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சேவைத்துறை ஏற்றுமதி 235.81 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது.  முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் இது 184.65 பில்லியன் டாலராக இருந்தது.  இந்த காலகட்டத்தில் சேவைத்துறையின் இறக்குமதி 134.99 பில்லியன் டாலராக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 105.45 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்தது.

மின்னணு பொருட்கள், அரிசி, பழங்கள், காய்கறிகள், இரும்புத்தாது உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி அதிகரித்து காணப்பட்டது. ஜவுளித்துறையின் ஏற்றுமதி முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தைவிட குறைந்துள்ளது.

-----

SMB/PLM/KPG/KRS



(Release ID: 1891670) Visitor Counter : 204


Read this release in: English , Urdu , Hindi , Marathi