பாதுகாப்பு அமைச்சகம்

21-வது இந்தியா-பிரான்ஸ் கூட்டு கடற்படைப்பயிற்சி ‘வருணா’- 2023

Posted On: 16 JAN 2023 5:24PM by PIB Chennai

21-வது இந்தியா-பிரான்ஸ் கூட்டு கடற்படைப்பயிற்சி ‘வருணா’- 2023 மேற்கு கடற்பகுதியில் இன்று (16 ஜனவரி 2023) தொடங்கியது. இரு நாட்டு கடற்படையின் கூட்டுப்பயிற்சி 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு ‘வருணா’ என்று 2001ம் ஆண்டு பெயரிடப்பட்டது.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘மறைந்திருந்து ஏவுகணையை அழிக்கும் ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் தேக், கடல் பகுதி ரோந்து விமானம் பி-81, டார்னியர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், மிக்-29கே ரக போர் விமானம் ஆகியவை கூட்டு பயிற்சியில் பங்கேற்றுள்ளன. இந்த கூட்டு பயிற்சி 2023-ஜனவரி 16 -ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும்.

***

SG/IR/RS/KRS



(Release ID: 1891634) Visitor Counter : 281


Read this release in: English , Urdu , Hindi , Marathi