வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவோர் உணர்வை வளர்ப்பதற்காக ஸ்டார்ட் அப் இந்தியா புதுமை வாரத்தின் 6-வது நாளான இன்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன
प्रविष्टि तिथि:
15 JAN 2023 7:05PM by PIB Chennai
புதுமை மற்றும் தொழில்முனைவோர் உணர்வை வளர்ப்பதற்காக ஒரு வார கால ஸ்டார்ட் அப் இந்தியா புதுமை வாரம் கடைபிடிக்கப்படும் நிலையில், இன்று நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலம் பனஸ்தாலி வித்யாபீடத்தில் உள்ள அடல் தொழில் பாதுகாப்பகத்தில், படைப்பாற்றல், புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் சிந்தனையை அதிகரிக்கும் வகையில் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 2 நாள் மெகா ஸ்டார்ட்அப் விழா நடத்தப்படுகிறது.
ஸ்டார்ட் அப் இந்தியா-வின் காணொலி வாயிலான 6-வது கருத்தரங்க அமர்வும் இன்று நடைபெற்றது. இந்த காணொலி கருத்தரங்கத்திற்கான இணைய தள இணைப்பு: https://www.youtube.com/watch?v=m338gXB48po
மும்பையில் உள்ள வீர்மாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் புதுமையை வளர்ப்பது மற்றும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவித்தல் என்ற கருப்பொருளில் சைக்ளத்தான் போட்டி நடைபெற்றது. மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள வளர்ச்சி மற்றும் தொழில் காப்பக கவுன்சிலில் ஸ்டார்ட்அப்களில் ‘பெண் தொழில்முனைவோர் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
*****
PLM / DL
(रिलीज़ आईडी: 1891452)
आगंतुक पटल : 209