அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவின் புவிசார் சுற்றுச்சூழல் அமைப்பில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஸ்டார்ட்-அப்களை ஊக்குவிக்க “ஜியோஸ்பேஷியல் ஹேக்கத்தானை” மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார்

Posted On: 14 JAN 2023 3:21PM by PIB Chennai

புதிய, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்திற்கு  ஸ்டார்ட்அப்கள் முக்கியமாகும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு)பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்த்தல், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று காலை “ஜியோஸ்பேஷியல் ஹேக்கத்தானை” தொடங்கிவைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் புவிசார் சுற்றுச்சூழல் அமைப்பில் புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட்அப்களை ஹேக்கத்தான் ஊக்குவிக்கும் என்றார். தேசத்தின் புவிசார் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் பங்களிக்க இளைஞர்களுக்கு அவர் அழைப்புவிடுத்தார்.

நமது மக்கள்தொகையில் பாதி பேர் 40 வயதிற்குட்பட்டவர்கள்; முன்னேறுவதில் மிகவும் ஆர்வமுள்ளவர்கள் என்றும், 2022 ஆம் ஆண்டில் யூனிகார்ன் கிளபில் 100 வது இந்திய ஸ்டார்ட்-அப்பைச் சேர்த்ததன் மூலம் இந்திய ஸ்டார்ட்-அப் பொருளாதாரம் ஒரு முக்கிய மைல்கல்லைத் தாண்டியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

ஜியோஸ்பேஷியல் ஹேக்கத்தானுக்குத் திட்டமிடுதல், பங்கேற்பு மற்றும் வடிவமைத்தலுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சர்வே ஆஃப் இந்தியா, ஐஐஐடி ஹைதராபாத் மற்றும் மைக்ரோசாப்ட் இந்தியா ஆகியவற்றை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். வரவிருக்கும் காலங்களில், புவிசார் உத்தி மற்றும் கொள்கைக்கு இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்றுவதற்கும்  புவியியல் துறையில் உண்மையான தற்சார்பாக மாறுவதற்கும் இது முறையான தொடக்கமாக செயல்படும் என்றும் கூறினார்.

இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்கள் மற்றும் முறைகளுடன் கொண்டாடப்படும் மகர சங்கராந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில், இந்த உன்னத பணியில் இணைந்த அனைத்து கூட்டாண்மை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்கள் மற்றும் சிந்தனையாளர்களையும் அவர் பாராட்டினார்.

இந்த ஹேக்கத்தானின் நோக்கம் பொது மற்றும் தனியார் புவியியல் துறைகளுக்கு இடையே கூட்டாண்மையை ஊக்குவிப்பது மட்டுமின்றி, நமது நாட்டின் புவிசார் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதும் ஆகும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

“ஜியோஸ்பேஷியல் ஹேக்கத்தான்” மார்ச் 10, 2023 அன்று முடிவடையும். மேலும் புவியியல் தேர்வு சிக்கல் அறிக்கைகளில்  சிறந்த தீர்வுகளுக்கான 4 வெற்றியாளர்களைக் கண்டறிய, ஆராய்ச்சி சவால்கள், ஸ்டார்ட்-அப் சவால்கள் என இரண்டு சவால்கள் இருக்கும்.

*****

 

SMB / DL


(Release ID: 1891275) Visitor Counter : 224