சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மக்களின் சுகாதார நலம் கருதி 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மற்றும் நல மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

Posted On: 12 JAN 2023 2:49PM by PIB Chennai

மத்திய அமைச்சகம் முதல் முறையாக ஆரோக்கியத்தை இந்தியாவின் முன்னேற்றதுடன் ஒருங்கிணைத்துள்ளது. பேரிடர் காலம் நாட்டின் சுகாதாரத்தை வலுப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று தேசிய ஆரோக்கிய திட்டத்தின் எட்டாம் திட்ட வடிவமைப்பு குழு கலந்தாலோசனையில் கூறுகிறார், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா.

திரு ஹர்தீப் சிங் பூரி, வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர், திரு கஜேந்திர சிங் செகாவத், மத்திய ஜல் சக்தி அமைச்சர், டாக்டர் வீரேந்திர குமார், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர், டாக்டர் பாரதி பிரவின் பவார், சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர், டாக்டர் வி கே பால் (சுகாதாரம்) மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

தேசிய ஆரோக்கிய கொள்கை 2017ன் படி 1.54 லட்சம் துணை ஆரோக்கிய மையங்கள் மற்றும் ஆரம்ப நிலை ஆரோக்கிய மையங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆரோக்கியம் மற்றும் நல மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. 135 கோடி பேருக்கு இத்திட்டத்தின் கீழ் சுகாதார தீர்வுகள் வழங்கப்பட்டன. மேலும், 12 ஆரோக்கிய சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

உலகளாவிய ஆரோக்கிய அமைப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் ஆகியவற்றை அறிந்து, இந்தியாவிற்கு, குறிப்பாக அதன் மாநிலங்களுக்கும், உள்ளூர் சவால்களுக்கு ஏற்ப தனக்கே சொந்தமான ஓர் ஆரோக்கிய அமைப்பு முறையை ஏற்படுத்த வேண்டும். அந்தியோதயா தத்துவத்தை சார்ந்த வகையில் மலிவான, எளிதில் பெறக்கூடிய, தரமான ஆரோக்கிய சேவையை நாட்டில் ஒவ்வொரு தனிநபருக்கும் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

வெவ்வேறு பரிசோதனை முறைகள், மருந்துகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் டிஜிட்டல் ஆரோக்கிய திட்டங்களை உருவாக்கி எதிர்காலத்தில் வலுவான ஆரோக்கிய அமைப்பை ஏற்படுத்தி நூற்றாண்டுக்கான வளர்ச்சி இலக்குகளிலிருந்து நீடித்த நிலையான அபிவிருத்திக்கான இலக்குகளுக்கு மாற வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த வருடத்தில் தேசிய ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்ட வடிவமைப்பு குழுவின் சாதனைகள்:

  • ஒரு லட்சம் ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கியம் மற்றும் நல மையங்களுக்கு தொலைதொடர்பு சேவைகளை சஞ்சீவனி இணையதளம் வழங்கியுள்ளது.
  • எச் பி வி தடுப்பூசிகளுக்கான விதிமுறைகளுக்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டன.
  • 30 கோடி ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடையாள அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
  • 20 கோடி ஆயுஷ்மான் பாரத் பிரதமர் காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • பிரதமரின் தேசிய பரிசோதனை முறை திட்டம் (பி எம் என் டி பி) 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 630 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
  • மூன்றாம் நிலை சேவைகள் மாநில மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வருகின்ற.
  • 9 லட்சத்துக்கும் மேற்பட்ட காசநோயாளிகளுக்கு நிக்‌ஷய் மித்ரா திட்டம் பயனளித்துள்ளது.
  • ஜல்ஜீவன் திட்டத்தினால் கடந்த 4-5 வருடங்களில் மலேரியா தாக்கம் மிகுதியாக குறைத்துள்ளது.

2025 க்குள் தொழுநோயை முற்றிலுமாக அகற்றுவது, மதிப்பிற்குரிய பிரதமரின் குறிக்கோள் இதனை நிறைவேற்றுவது குறித்து வலியுறுத்தினார். இக்குழுவின் ஒருங்கிணைப்பால் ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை எளிதில் அளிக்ககூடும் என்கிறார் டாக்டர் மன்சுக் மாண்டவியா.

•••••••••••••

RKM/SM/PK


(Release ID: 1890798) Visitor Counter : 175


Read this release in: English , Urdu , Hindi , Telugu