வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த ஸ்டார்ட் அப் இந்தியா புதுமை கண்டுபிடிப்புகள் வாரத்தின் 3-ம் நாளில் பயிலரங்குகள், இணையகருத்தரங்குகள்

Posted On: 12 JAN 2023 5:35PM by PIB Chennai

தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த ஸ்டார்ட் அப் இந்தியா புதுமை கண்டுபிடிப்புகள் வாரத்தின் 3-ம் நாளில் பயிலரங்குகள், இணைய கருத்தரங்குகள் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 19-க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு இந்தியாவில் ஸ்டார்ட் அப் சூழலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தது.

பெண்களை தொழிலதிபர்களாக மாற்றுவதற்கான அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், ஆதரவு அளிப்பதற்குமான கருத்தரங்கை ஐஐஎம் லக்னோ தொழில் காப்பகம் மையம் ஏற்பாடு செய்திருந்தது.  இதில் பங்கேற்க 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்திருந்தனர்.

தஞ்சாவூரில் உள்ள தொழில்நுட்ப வர்த்தக காப்பகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் வர்த்தக குறியீடு, வர்த்தக உரிமை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கோயம்புத்தூரில் உள்ள ஏஐசி ரெய்ஸ் தனியார் வர்த்தக காப்பக நிறுவனம் 3 நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு, புனே, ஒடிசாவிலிருந்து 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

------ 

SM/IR/KPG/PK


(Release ID: 1890793) Visitor Counter : 153