சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம், ஜப்பானின் ஜி-7 தலைமைத்துவம் இணைந்து வசுதைவ குடும்பகம் என்பதையொட்டி, உலகின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது

Posted On: 12 JAN 2023 3:36PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர்  திரு பூபேந்தர் யாதவ், ஜப்பான் நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு அக்கிரோ நிஷிமுராவை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது  ஜி-7  / ஜி-20 இணைப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை, கடல்சார் மற்றும் பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம், ஜப்பானின் ஜி-7 தலைமைத்துவம் இணைந்து வசுதைவ குடும்பகம் என்பதையொட்டி, உலகின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ள சிறந்த வாய்ப்பாக ள்ளது என்று திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்தார். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஜப்பான் நாட்டின் ஜி-7 தலைமைத்துவத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.

ஜப்பானின் புதிய தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிக்கு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார். சுற்றுப் பொருளாதாரம் மற்றும் திறன்மிக்க வளம், குறைந்த அளவிலான கார்பன் தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் என்று அவர் கூறினார்.

                               ***

SM/IR/KPG/PK



(Release ID: 1890760) Visitor Counter : 132