நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூசுகளைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்: மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் கண்டுபிடிப்பு

Posted On: 12 JAN 2023 11:44AM by PIB Chennai

சுரங்கப் பகுதிகளில் ஏற்படும் தூசுகளைக் குறைக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் ராஞ்சியில் உள்ள மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் (இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனம்), புதிய அமைப்புமுறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதோடு, கடந்த டிசம்பர் மாதம் அதற்கு காப்புரிமையையும் கோரியுள்ளது. சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள், துறைமுகங்கள், கட்டுமான வளாகங்கள் உள்ளிட்ட நிலக்கரி மற்றும் இதர கனிமங்கள் வெளிப்புறங்களில் சேமிக்கப்படும் பகுதிகளில் இந்த அமைப்புமுறை உதவிகரமாக இருக்கும். திறந்தவெளிகளில் தூசு ஏற்படுவதையும், சத்தத்தையும் இந்த புதிய முறை குறைக்கும்.

நாட்டின் எரிசக்தி தேவைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பூர்த்தி செய்வதற்காக நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிலக்கரி/ பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நிலக்கரி சுரங்கம் மற்றும் அது சார்ந்த பணிகளால் காற்று மாசடைவதைத் தடுப்பதற்கும், குறைப்பதற்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வரையறுக்கப்பட்ட வழியாக அல்லாமல் திறந்தவெளியில் காற்றில் பல்வேறு மூலக்கூறுகள் வெளிப்படுவதால் ஏற்படும் தூசுகளால் காற்று மாசடைகிறது. இத்தகைய தூசுகள் உற்பத்தியாவதையும், காற்றில் கலப்பதையும் குறைப்பதற்கு தற்போதைய கண்டுபிடிப்பு வழிவகை செய்கிறது.

***

(Release ID: 1890621)

PKV/RB/PK


(Release ID: 1890659) Visitor Counter : 233


Read this release in: English , Urdu , Hindi , Kannada