சுரங்கங்கள் அமைச்சகம்
கனிம ஆய்வுத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக தேசிய கனிம ஆய்வுக் கழகத்திற்கு ரூ. 154.84 கோடி: மத்திய சுரங்க அமைச்சகம் ஒப்புதல்
Posted On:
11 JAN 2023 1:20PM by PIB Chennai
மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கனிம ஆய்வுக் கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் தலைமையில் நடைபெற்றது.
ரூ. 154.84 கோடி மதிப்பில் கனிம ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ளவும், திறன்களை மேம்படுத்தவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாட்டில் கனிம ஆய்வை ஊக்குவிப்பதற்கான கனிம ஆய்வு திட்டத்தில் கிராஃபைட், இரும்பு, நிலக்கரி, துத்தகநாகம் மற்றும் தொடர்புடைய தாதுக்கள், பாக்சைட், ஈயம், தாமிரம் போன்ற உலோகங்கள், வெள்ளீயம் மற்றும் அது சார்ந்த உலோகங்கள், மாங்கனீசு, சுண்ணாம்பு ஆகியவை அடங்கும்.
இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், இந்திய சுரங்க அலுவலகம் ஆகியவற்றின் திறனையும், கனிம ஆய்வையும் மேம்படுத்துவதற்கு நிதி உதவி வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தக் கனிம ஆய்வுத் திட்டங்களும், ஆய்வு முகமைகளுக்கான நிதி உதவியும், நாட்டிற்கு ஏலம் விடக்கூடிய கனிம தொகுதிகளை வழங்குவதோடு, சுரங்கத் துறையில் தன்னிறைவு அடையவும் உதவியாக இருக்கும்.
***
TV/RB/RJ
(Release ID: 1890281)
Visitor Counter : 184