மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டில் ‘இந்திய பணியாளர்கள் உலகம் முழுவதும் செல்வதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு’ என்ற அமர்வில்மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்


உலக அளவிலான சேவை திறனில் இந்தியாவை மேலும் வலுப்படுத்த வெளிநாடு வாழ் இந்திய சமுதாயத்தினருக்கு அழைப்பு

Posted On: 10 JAN 2023 4:44PM by PIB Chennai

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறும் 17-வது வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டில் ‘இந்திய பணியாளர்கள் உலகம் முழுவதும் செல்வதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு’ என்ற அமர்வில் பங்கேற்று மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், வெளிநாடு வாழ் இந்திய சமுதாயத்தினர் இந்திய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக திகழ்வதாக கூறினார். இந்திய பணியாளர் சக்தியை உலக அளவில் கொண்டு செல்வதிலும் மனித சமுதாயத்திற்கு புதிய இந்திய பாணியில் சேவை செய்வதிலும் வெளிநாடு வாழ் இந்திய சமுதாயத்தினர் முக்கிய பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார்.

இந்திய பணியாளர்கள் கடின உழைப்பாளர்களாகவும், நேர்மைமிக்கவர்களாகவும், பொறுப்புணர்வு உள்ளவர்களாகவும் திகழ்கின்றனர் என்று அவர் தெரிவித்தார். புதிய கல்விக்கொள்கை 2020 நெகிழ்வுதன்மையுடன் அமைந்துள்ளது எனவும் திறன் மேம்பாட்டுக்கான வழிகளை கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். திறன் வாய்ந்த மனித சக்தியின் மையமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

அத்துடன் தொழில்நுட்பங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். துடிப்பு மிக்க வெளிநாடு வாழ் இந்திய சமுதாயத்தினர் மீது  பிரதமர் திரு நரேந்திர மோடி அதீத நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  3 கோடியே 20 லட்சம் வெளிநாடு வாழ் இந்திய சமுதாயத்தினர் தங்களது அனுபவங்களையும், நிபுணத்துவத்தையும், பயன்படுத்தி உலகத்திற்கு சேவை செய்யும் இந்தியாவின் திறன்களை மேலும் வலுப்படுத்துவார்கள் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். பின்னர் குவைத் மற்றும் மொரிஷியசைச் சேர்ந்த இந்திய சமுதாயத்தினருடன் திரு தர்மேந்திர பிரதான் கலந்துரையாடினார். இளைஞர்களுக்கு இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மீகத்தை போதிப்பது தொடர்பாக அவர்கள் தெரிவித்த ஆலோசனைகளுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

புதிய தேசிய கல்விக்கொள்கை 2020, இந்தியாவின் பாரம்பரியம், நவீனத்துவம் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துவதாக அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எடுத்துரைத்தார்.

                                              ---  

SMB/PLM/RS/KPG


(Release ID: 1890082) Visitor Counter : 91