வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா வாய்ப்புக்கான நிலம் என்றும், இச்செய்தியை இந்திய வம்சாவளியினர் உலகிற்கு எடுத்துச்செல்லவேண்டும் என்றும் திரு கோயல் கூறுகிறார்
Posted On:
09 JAN 2023 4:15PM by PIB Chennai
புதிய இந்தியாவை வடிவமைக்க இந்திய வம்சாவளியினர் பங்களிப்பு செய்யவேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் அளப்பரிய பங்களிப்பை செய்துள்ள இந்திய வம்சாவளியினரை பாராட்டிய திரு கோயல், அவர்கள் இந்திய வரலாற்றின் ஒளிக்கீற்றுகள் என்று கூறினார். இந்தியாவின் சிறந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம், இந்திய வம்சாவளியினர் பெரிய நிறுவனங்களுக்கு தலைமை வகிக்க உதவியது என்று கூறிய அவர், இந்தியர்கள் பங்களிப்பு செய்தது பெருமையளிக்கக்கூடியது என்று தெரிவித்தார். இன்னும் சில வருடங்களில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று தெரிவித்தார். இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், பாராட்டும் வகையிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் கொண்டாடப்படுவதாக அவர் கூறினார். பண்டிகைக் காலங்களில் பரிசளிக்க இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறிப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குமாறு இந்திய வம்சாவளியினரை திரு கோயல் கேட்டுக்கொண்டார்.
-------
SM/IR/RS/RJ
(Release ID: 1889855)
Visitor Counter : 194