அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய அறிவியல் தினம் 2023-ஐயொட்டி சர்வதேச நலனுக்கான சர்வதேச அறிவியல் என்ற கருப்பொருளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தில்லி தேசிய ஊடக மையத்தில் வெளியிட்டார்
Posted On:
09 JAN 2023 4:05PM by PIB Chennai
தேசிய அறிவியல் தினம் 2023-ஐ யொட்டி சர்வதேச நலனுக்கான சர்வதேச அறிவியல் என்ற கருப்பொருளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, மற்றும் விண்வெளித்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தில்லி தேசிய ஊடக மையத்தில் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், 2023-ல் இந்தியா அடியெடுத்து வைத்துள்ள நிலையில், உலகின் இந்தியாவின் பங்களிப்பையும், சர்வதேச அளவில் எழும் தன்மையையும் இந்த கருப்பொருள் குறிப்பிடுவதாக தெரிவித்தார்.
தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகள், பொருள் ஆகியவற்றில் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
ஜி20 தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றுள்ளதுடன், சர்வதேச நலனுக்கான சர்வதேச அறிவியல் என்ற கருப்பொருள் பொருத்தமாக அமைந்துள்ளது என்று தெரிவித்த டாக்டர் ஜிதேந்திர சிங், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற வளரும் தெற்கு நாடுகளின் குரலாக இது இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
***
SM/IR/RS/RJ
(Release ID: 1889794)
Visitor Counter : 383