பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

சாமானியர்களுக்கு மிகப்பெரிய சமூக-பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து திட்டங்களும் 100 சதவீத முழுமை அடைய மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது: திரு பாரத் லால், தலைமை இயக்குநர், நல்லாட்சிக்கான தேசிய மையம்

Posted On: 08 JAN 2023 2:22PM by PIB Chennai

சாமானியர்களுக்கு மிகப்பெரிய சமூக-பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து திட்டங்களும் 100 சதவீத முழுமை அடைய மத்திய அரசு முனைப்புடன்  செயல்பட்டு வருகிறது என்று நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநர் திரு பாரத் லால் கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினசில் (ஐஎஸ்பி) 'பொதுக் கொள்கை, ஆட்சி மற்றும் புத்தாக்கம்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய திரு லால்கடந்த எட்டரை ஆண்டுகளில், குடிநீர், மின்சாரம், சமையல் எரிவாயு போன்ற பல்வேறு சேவைகளை உலகமயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கிராமம் மற்றும் பஞ்சாயத்து அளவில் இணையதள இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சிறந்த செயல்பாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு தவிர வேறில்லை என்றார்.

ஆட்சி, கொள்கை மற்றும் புத்தாக்க செயல்பாடுகள் போன்றவைகள் இணைந்து செயல்படும் போது அதிசயங்களை உருவாக்க முடியும் என்று கூறிய திரு லால், குஜராத் வளர்ச்சிப் பாதை உதாரணத்தை மேற்கோள் காட்டினார்.

1999-2000-ல் பொருளாதார வளர்ச்சி 1.02 சதவீதமாகவும்2000-2001-ல் 4.89 சதவீதமாகவும் இருந்த நிலையில், குஜராத் முதல்வர் திரு நரேந்திர மோடியின் கீழ் அடுத்த இருபதாண்டுகளில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியது, பின்னர் மே, 2014 முதல் பிரதமராக அவர் பதவி வகிக்கிறார். இந்தக் காலகட்டத்தில், குஜராத்தில் தண்ணீர்ப் பஞ்சம் நீங்கியது மட்டுமின்றி, 2001-ல் ஏற்பட்ட கட்ச் நிலநடுக்கத்துக்குப் பிறகு, காலநிலை மற்றும் பேரழிவைத் தாங்கும் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, அனைத்தையும் உள்ளடக்கிய இரட்டை இலக்க வளர்ச்சிக்கும், வாய்ப்புகளுக்கும் குஜராத் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது, என்றார். 

தேசியக் கல்விக் கொள்கைக்கு  பிறகு கல்வித் துறையில் 3.5  லட்சத்துக்கும் அதிகமான பழங்குடியினர் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 740 ஏக்லவ்யா மாதிரி உறைவிடப்  பள்ளிகளை நிறுவுவதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்று அவர்  சுட்டிக்காட்டினார்.

*****

MS/GS/DL



(Release ID: 1889624) Visitor Counter : 155