வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியா ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம்: இரு நாடுகளுக்கும் வெற்றியளிக்கும் ஒப்பந்தம்

Posted On: 08 JAN 2023 11:57AM by PIB Chennai

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், #IndAusECTA கடந்த ஆண்டு, 2022  ஏப்ரல் 2-ம் தேதி கையெழுத்தானது; எழுத்துப்பூர்வ ஒப்புதலுக்குப் பிறகு, இந்த ஒப்பந்தம் 2022-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

 

இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் வெற்றி-வெற்றி

 

ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு பெரும்பாலும் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்கிறது ; அதே நேரத்தில் இந்தியா முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ECTA ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் வெற்றி-வெற்றி வாய்ப்புகளை உருவாக்குகிறது. வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் கூடுதல் செயலர் ராஜேஷ் அகர்வால் கூறியதாவது: “இந்த ஆண்டு UAE FTA மற்றும் Ind – Aus ECTA ஆகிய இரண்டு வர்த்தக ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் வணிகத் துறை தனித்துவமான சிறப்பை அடைந்துள்ளது.  இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ECTA ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததன் மூலம், உலகின் இரண்டு முக்கிய பொருளாதாரங்கள் இணைந்துள்ளது - இதில் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரம் மற்றும் ஆஸ்திரேலியா உலகின் 14-வது பெரிய பொருளாதாரம் ஆகும். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத் தேவை பெரிதும் பூர்த்தியாவதால், இந்த ஒப்பந்தம் இரு தரப்பிலும் வாய்ப்புகளை வழங்குவதோடுஇரு நாடுகளுக்கும் வெற்றி - வெற்றி என்ற தீர்வுக்கு வழி வகுக்கும்” எனக் கூறினார்.

 

இந்த ஒப்பந்தத்தின் நன்மைகள் என்ன? அதை ஆராய்வதற்கு முன், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தின் தற்போதைய நிலையைப் பார்ப்போம். முந்தைய நிலையை ஒப்பிட்டு, இந்த ஒப்பந்தத்தின் மூலம் வர்த்தகம் எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான தற்போதைய வர்த்தகப் போக்கு

 

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 17 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ள நிலையில் ஏற்றுமதி 10.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா செய்யும் இறக்குமதியில் பெரும்பான்மையானவை (96%) மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை பொருட்கள் ஆகும். அதிலும் குறிப்பாக நிலக்கரி அதிக அளவில் (ஆஸ்திரேலியாவின் இந்தியாவுக்கான ஏற்றுமதியில் 74%) இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 71.4% கோக்கிங் நிலக்கரி ஆகும். மறுபுறம், ஆஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட தயாரிப்புகள் (நுகர்வோர் பொருட்கள்) ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆஸ்திரேலியாவில் பயிலும் மாணவர்களின் கல்விக்காக இந்தியாவும்  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 பில்லியன் டாலர் செலவழிக்கிறது.

 

இரு நாட்டு வர்த்தகம் குறித்த இந்தத் தரவுகள், ECTA ஒப்பந்தம் அமலுக்கு வந்த டிசம்பர் 29-ம் தேதியன்று மும்பையில் நடைபெற்ற நிகழ்வின் போது, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆற்றிய உரையிலும் எதிரொலித்தது.

 

ஆஸ்திரேலியாவுக்கு முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது.  ஏனெனில் அந்நாடு எதையும் உற்பத்தி செய்யாது. பெரும்பாலும் மூலப்பொருள் மற்றும் இடைநிலை பொருட்களை மட்டுமே அந்நாடு உற்பத்தி செய்யும். இதன் மூலம் எங்களுக்கு மலிவான மூலப்பொருட்கள் கிடைப்பதால் உலகளவில் போட்டி போட்டுச் செயல்பட எங்களுக்கு உதவும். இந்திய நுகர்வோருக்கு சிறப்பாக சேவை செய்யவும், தரமான பொருட்களை மிகவும் மலிவு விலையில் வழங்கவும் எங்களுக்கு உதவுகிறது.

 

"பெரும்பாலும் இறக்குமதியைச் சார்ந்து இருக்கும் ஆஸ்திரேலியா, விரைவில் இந்தியாவில் இருந்து நிறைய முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பார்க்கத் தொடங்குவர். இந்தியர்களின் திறமையால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டிலும், பெரிய அளவிலான வேலை மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும்."

 

#IndAusECTA பின்வரும் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது:

 

சரக்கு வர்த்தகம்

சேவைகளில் வர்த்தகம்

தோற்ற விதிகள்

வர்த்தகத்திற்கான தொழில்நுட்ப தடைகள் (TBT)

சுங்க நடைமுறைகள் மற்றும் வர்த்தக வசதி

வர்த்தகத் தீர்வுகள்

சட்ட மற்றும் நிறுவன சிக்கல்கள்

காலநிலை ஆர்வலர்களின் இயக்கம்

 

 இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும், உலகத்துக்கும் எப்படிப் பயனளிக்கும் என்பதைப் பார்ப்போம்.

 

பொருட்களின் வர்த்தகத்திற்கு ஏற்படும் நன்மைகள்

 

 இந்திய பொருட்கள் ஆஸ்திரேலிய சந்தைக்கு பூஜ்ஜிய சுங்க வரியுடன் அனுப்பப்படுகின்றன

 

இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவிற்கு தற்போது 5% இறக்குமதி வரியில் உற்பத்தி செய்து வரும் இந்தியத் துறைகளுக்கு பயனளிக்கும். இந்த ஒப்பந்தம், 98.3% வரித் திட்டங்களுக்கு முழு வரிவிலக்கோடு, சந்தையை எளிதாக அணுகவும் உதவும். இது ஆஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் 96.4% ஆகும். மீதமுள்ள 1.7% வரிகளுக்கு, 5 ஆண்டுகளில் முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.

 

மலிவான மூலப்பொருட்கள், மருந்துகளுக்கு விரைவான ஒப்புதல்

 

ஜவுளி மற்றும் ஆடைகள், விவசாயம் மற்றும் மீன் பொருட்கள், தோல், பாதணிகள், மரச்சாமான்கள், பல பொறியியல் பொருட்கள், நகைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகள் போன்றவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. எஃகு, அலுமினியம், மற்றும் பிற தொழில்களுக்கான மூலப்பொருட்கள்  மலிவு விலையில் கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தின் கீழ்காப்புரிமை பெற்ற, பொதுவான மருந்துகளுக்கு விரைவாக அனுமதி கிடைக்கும்.

 

ஆஸ்திரேலியாவுக்கு செய்யப்படும் 90% இறக்குமதிகளுக்கு முழு வரி விலக்கு

 

ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் (நிலக்கரி உட்பட) 90% பொருட்களுக்கு இந்தியா முழு வரி விலக்கு பெறுகிறது. 85.3% மதிப்புள்ள பொருட்களுக்கு இந்த வரிவிலக்கு உடனடியாகவும், 3.67 % பொருட்களுக்கு 3, 5, 7 மற்றும் 10 ஆண்டுகளில் படிப்படியாக முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.

 

ஐந்தாண்டுகளில் 10 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகள், 10 பில்லியன் டாலர் அதிக ஏற்றுமதி

 

வரியில்லாத உடனடி அணுகல் இந்தியாவில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு 10 பில்லியன் டாலர் கூடுதல் ஏற்றுமதிகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சேவைகளில் வர்த்தகத்திற்கு ஏற்படும் நன்மைகள்

 

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படிப்புக்கு பிந்தைய பணி விசா மூலம் பயனடைய உள்ளனர்

சேவைகளில் வர்த்தகத்தின் கீழ் ஆஸ்திரேலியா செய்துள்ள உறுதிமொழிகள், இதுவரை செய்துள்ள வர்த்தக ஒப்பந்தங்களில்  சிறந்தவையாகக் கருதப்படுகிறது. 120 துணைத் துறைகளில் மிகவும் விருப்பமான நாடு (MFN) அந்தஸ்து அளிப்பதால், யோகா ஆசிரியர்கள் மற்றும் இந்திய சமையல் கலைஞர்களுக்கு ஆண்டுக்கு 1,800 ஒதுக்கீடு வழங்கப்படும். இந்திய மாணவர்களுக்கு படிப்புக்கு பிந்தைய வேலை விசா (18 மாதங்கள் - 4 ஆண்டுகள்) கிடைக்கும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள 1,00,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பயனடைவார்கள்.

 

ஆஸ்திரேலிய சேவைகள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்மறை பட்டியலில் இடம் பெற்றுள்ளன

 

ஒப்பந்தம் அமலுக்கு வந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா எதிர்மறை பட்டியலுக்கு ஒப்புக்கொண்டுள்ளது. (எதிர்மறை பட்டியல் அணுகுமுறையின் கீழ், ஒரு நாடு அனைத்து பகுதிகளிலும் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் / சேவைகளை சமமாக கருதும் ) எனவே, இதில் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சேவைகளுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இந்த சேவையை வழங்கும்.

 

முதன்முறையாக சுமார் 31 சேவை துணைத் துறைகளில் மிகவும் விருப்பமான தேசம் என்ற அந்தஸ்துடன் சுமார் 103 சேவை துணைத் துறைகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவுக்கு உறுதியளிக்கிறது. இதன் மூலம்  வங்கி, காப்பீடு, பிற நிதிச் சேவைகள், வணிகச் சேவைகள் ஆகியவற்றில் ஆஸ்திரேலியா பொறுப்புகளைப் பெறுகிறது. இந்த ஒப்பந்தம் கணினி தொடர்பான சேவைகள், தொலைத்தொடர்பு, கட்டுமானம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகளில் முதலீடு செய்வதற்கான வழிகளைத் திறக்கிறது.

 

12 மாதங்களில் தொழில்முறை சேவைகளில் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்களை (MRAs) தொடரவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 

எதிர்பாராத விளைவுகளிலிருந்து பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அம்சங்கள்

 

வர்த்தகத்தில் விளையும் எதிர்பாராத விளைவுகளில் இருந்து இரு நாடுகளையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சில 'பாதுகாப்பு அம்சங்களை' இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது; அவை என்னவென்று ஆராய்வோம்.

 

இறக்குமதி அதிக அளவுக்கு அதிகரித்தால் இருதரப்பு பாதுகாப்பு 14 ஆண்டுகளுக்கு கிடைக்கும்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு, கவலையை ஏற்படுத்தக்கூடிய ஒப்பந்தத்தின் சில பகுதிகளுக்கு மதிப்பாய்வைக் கோருவதற்கு இரு நாடுகளுக்கும் உதவும் வகையில் சிறப்புப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

 

இரட்டை வரி விதிப்புக்கு முடிவு

 

இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகளை இந்த ஒப்பந்தம் நீக்கியுள்ளது. ஆஸ்திரேலியா தனது வரிச் சட்டங்களில் மாற்றங்களைச் செய்து, இரட்டை வரிவிதிப்பில் முரண்பாட்டை நீக்கியுள்ளது. இதன் மூலம் ஏப்ரல் 1, 2023 முதல் இரட்டை வரிவிதிப்பு நீக்கப்படும். இதன் விளைவாக, தகவல் தொழில்நுட்பத் துறை அதிக லாபம் ஈட்டலாம் மற்றும் போட்டித்தன்மையுடன் மாறலாம்.

 

இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்; ’ஐடி துறையில் போட்டித்தன்மையை குறைத்து லாபம் ஈட்டக்கூடிய ஐடி சேவைகள் மீதான இரட்டை வரி விதிப்பை இந்த ஒப்பந்தம் நீக்கும். ஏப்ரல் 1 முதல், ஐடி துறைக்கான இரட்டை வரிவிதிப்பு நீக்கப்படுவதால், மில்லியன் கணக்கான டாலர்களை சேமித்து பில்லியன் டாலர்களை நோக்கிச் செல்வோம்’ எனக் கூறினார்.

 

இந்தியப் பொருளாதாரத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ற ஒரு ஒப்பந்தம்

 

இந்தியப் பொருளாதாரத்தின் தனித்தன்மைக்கு ஏற்ற வகையில் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் சில பயனுள்ள அம்சங்கள் இங்கே:

 

பால் மற்றும் பிற பால் பொருட்கள், கோதுமை, சர்க்கரை, இரும்புத் தாது, ஆப்பிள் மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றில் ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா சலுகைகளை வழங்கவில்லை. இவை ஆஸ்திரேலியாவின் முக்கிய ஏற்றுமதி என்பதால் இது பொதுவாக சாத்தியமற்றதாகும்.

 

ஆஸ்திரேலியா 100% வரி விலக்கு வழங்கியுள்ள நிலையில் இந்தியா இதுவரை தனது வரிகளில் 70% மட்டுமே ஆஸ்திரேலியாவிற்கு சலுகை வழங்கியுள்ளது.

 

மருந்துத்துறையில் இந்தியா பெரும் பயனடைய முடியும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆஸ்திரேலிய மருத்துவ சந்தையில் (இந்தியா வெறும் 3% மட்டுமே) எளிதில் ஊடுருவிச் செல்லும்.

 

ஜவுளி/ ஆடைகள், தோல்/ பாதணிகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், மீன் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் மின்சாரப் பொருட்கள் போன்ற இந்தியாவின் உழைப்பு மிகுந்த துறைகளுக்கு பெரும் லாபம் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறைகள், வியட்நாம் மற்றும் பிற நாடுகளுக்கு இணையாக வரியில்லா அணுகலைப் பெறுவர்.

 

மாணவர்கள், பணியாளர்/தொழிலாளர் விசாக்கள், விவசாயத் தொழிலாளர் விசாக்கள் ஆகியவற்றிற்கு தாராளமாக வேலை விசாக்கள் வழங்குதல்.

 

இந்த ஒப்பந்தம் இங்கிலாந்து, கனடா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளை இந்தியாவுடன் இதே போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த ஒப்பந்தம் RCEP ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதன் விளைவாக ஏற்படும் எந்த இழப்பையும் இந்தியா சமாளிக்க உதவுகிறது.

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மொத்த வர்த்தகம் 2035-ம் ஆண்டுக்குள் 45-50 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

மேற்கூறிய விதிகளின் விளைவாக, இந்தியப் பொருளாதாரத்திற்கு பல நீண்ட கால ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

இந்தியா ஆஸ்திரேலியா ECTA நடைமுறைக்கு வருவது இந்திய தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் சந்தைப் பங்கை ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இந்தியப் பொருட்களுக்கான புதிய சந்தைகளும் உருவாக வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய ஒழுங்குமுறை செயல்முறைகளை எளிதாக்குவதன் மூலம் மருந்து தயாரிப்புகளில் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026-27 ஆம் ஆண்டிற்குள் ஏற்றுமதி 10 பில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் சுமார் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மொத்த இருதரப்பு வர்த்தகம் 2035-ம் ஆண்டுக்குள் 45-50 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்புதல் மற்றும் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளின் அரசுகளும் இந்த மைல்கல்லை அடைய ஒன்றாக உழைத்துள்ளன. இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மட்டுமின்றி இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் நம்பிக்கையுடன் உள்ளன.

 

இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலிய வர்த்தகர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குறிப்பிடுகிறார். இந்தியப் பிரதமரின் அழைப்பை ஏற்று, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக வணிகக் குழுவுடன் மார்ச் மாதம் இந்தியா வர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

ஆஸ்திரேலிய பிரதமருக்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, ECTA ஒப்பந்தம் நமது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளின் மகத்தான திறனைத் திறப்பதோடு, இரு தரப்பிலும் வணிகங்களை அதிகரிக்கும் எனக் கூறினார்.

 

ECTA அமலுக்கு வருவதைக் குறிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பிரட் லீயின் வேகம் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் நிறைவுடன் ECTA பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இது இரு நாடுகளுக்கும் இடையேயான அன்பின் உழைப்பு என்றும் கூறினார். இரண்டு நாட்டு மக்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம், கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்காக இந்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

 

அமைச்சரின் ஊடகவியலாளர் சந்திப்பை முழுமையாக இங்கே பாருங்கள்.

 

இந்த ஒப்பந்தத்தைப் பற்றி கூறிய ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹான் டான் ஃபாரல்,,  இந்தியாவின் இளைஞர்கள், பல்வகைப்பட்ட பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப் பாதை ஆகியவை ஆஸ்திரேலிய வணிகங்களுக்கு கல்வி, விவசாயம், எரிசக்தி, வளங்கள், சுற்றுலா, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்டவற்றில் வாய்ப்புகளை

 

அமைச்சரின் கட்டுரையை முழுமையாக இங்கே படிக்கவும்.

 

29.12.2022 அன்று இந்தியா - ஆஸ்திரேலியா ECTA அமலுக்கு வருவதற்குத் தேவையான அனைத்து அறிவிப்புகளும் வருவாய்த் துறை மற்றும் வர்த்தகத் துறையின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஆகியவற்றால் வெளியிடப்பட்டுள்ளன.

 

இந்தியா ஆஸ்திரேலியா ECTA தொடர்பான நடைமுறை சிக்கல்கள் மற்றும் வினவல்கள் பற்றிய கூடுதல் தகவல்களை கீழே காணலாம்:

 

சுங்க அறிவிப்புகள்:

கட்டணச் சலுகைகள் (சுங்க வரி அறிவிப்பு)

 

தொடக்க விதிகள் (எண். 112/2022-சுங்கம் (N.T.)

 

DGFT அறிவிப்புகள் மற்றும் பொது அறிவிப்புகள்:

 

தொடக்கச் சான்றிதழுக்கான ஏஜென்சிகளின் பட்டியல் (பொது அறிவிப்பு எண்: 44/2015-20; தேதி 22.12.2022)

 

மின்னணுத் தாக்கல் மற்றும் பிறப்பிடத்தின் முன்னுரிமைச் சான்றிதழை வழங்குவதற்கான வர்த்தக அறிவிப்பு (வர்த்தக அறிவிப்பு எண். 23/2022-23; 22.12.2022)

 

TRQ ஒதுக்கீடு (பொது அறிவிப்பு)

 

தொடக்கச் சான்றிதழை வழங்குவதற்கான பொதுவான டிஜிட்டல் தளத்திற்கான DGFT உதவி மையம்: தொலைபேசி எண்:1800-111-550

மின்னஞ்சல்: coo-dgft[at]gov[dot]in.

 

ஆன்லைன் CoO க்கான இணைய இணைப்பு: coo.dgft.gov.in

 

ஒப்பந்தம் குறித்து இங்கே பார்க்கவும்: https://commerce.gov.in/international-trade/trade-agreements/ind-aus-ecta/

 

#IndAusECTA பற்றிய கூடுதல் தகவல்கள்:

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

https://www.dfat.gov.au/trade/agreements/in-force/australia-india-ecta/australia-india-ecta-official-text

https://www.trademinister.gov.au/minister/don-farrell/media-release/trade-deal-unlocks-access-india

உலக வர்த்தக அமைப்பின் சர்வதேச வர்த்தக சொற்களஞ்சியம்

ECTA பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன? #IndAusECTA என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் அவற்றைப் பகிரவும்.

 

*****

MS/CCR/DL(Release ID: 1889622) Visitor Counter : 523