சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆராய்ச்சியில் சர்வதேச தலைமையாகத் திகழும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு என்பது கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில் நிரூபிக்கப்பட்டது: டாக்டர் மாண்டவியா

Posted On: 08 JAN 2023 8:51AM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) மண்டல மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இணைப்புக் கட்டடத்தை  மத்திய  சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா இன்று திறந்துவைத்தார். இவ்விழாவில், மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர்  டாக்டர். பாரதி பிரவீன் பவார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.  மேலும், பொது சுகாதார ஐசிஎம்ஆர் பள்ளி மற்றும் பிஎஸ்எல் ஆய்வகத்திற்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.  அபராஜிதா சாரங்கி கலந்துகொண்டார்.

திறப்பு விழாவில் பேசிய டாக்டர். மாண்டவியாமருத்துவ ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் தலைமைவகிக்கும் வல்லமை இந்தியாவிற்கு இருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

இதனை, கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில், உலகின் முதல் கொரோனாத் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே, உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட கொரோனாத் தடுப்பூசியை அறிமுகப்படுத்திஇந்தியாவில் நிரூபித்திருப்பதாகவும் கூறினார்.  

ஆராய்ச்சியைப் பொறுத்தவரை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின், ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் எனக் குறிப்பிட்ட அவர்இது மருத்துவ ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், கொரோனாத் தடுப்பூசி தயாரிப்பில் ஐசிஎம்ஆர் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில், சுகாதாரத்துறை  முன்னுதாரணமாக வளர்ச்சி கண்டிருப்பதாகவும்  கூறினார். ஒடிசா மாநிலத்தில்  கடந்த 2014ம் ஆண்டு 3-ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 10-ஆக அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய டாக்டர் பாரதி பிரவீன் பவார், ஐசிஎம்ஆர்-ன் நடமாடும் ஆய்வகங்களை, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பூட்டான் போன்ற வெளிநாட்டினரும் பயன்படுத்திக்கொண்டதை நினைவுகூர்ந்தார்.

*****

 

MS/ES/DL



(Release ID: 1889555) Visitor Counter : 138