வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

கடந்த 8 ஆண்டுகளாக மேற்கொண்டக் கட்டமைப்புச் சீர்திருத்தங்களின் உலகின் முதல் 3 முன்னணி பொருதார நாடுகளில் ஒன்றாக இந்தியா முன்னேறியிருக்கிறது : பியூஷ் கோயல்

Posted On: 07 JAN 2023 2:28PM by PIB Chennai

மத்திய அரசு கடந்த  8 ஆண்டுகளாக மேற்கொண்ட  கட்டமைப்புச் சீர்திருத்தம் காரணமாகவே, உலகின் முதல் 3  வளர்ந்த பொருளாதார நாடுகளுள் ஒன்றாக இந்தியா முன்னேறியிருப்பதாக  மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் பெருமிதம் தெரிவித்துள்ளார். வார்டன் இந்தியா பொருளாதாரக் கூட்டமைப்பின் 27-வது கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் அவர் பங்கேற்றார். அசாதாரணக் காலகட்டத்தில், புத்தாக்கங்களுக்குத் தலைமை வகிக்கும் இந்தியா என்பதுதான் இந்தக் கூட்டத்தின் கருப்பொருள்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், பொருளதார சீர்திருத்தங்களில் தாக்கங்கள் வளர்ச்சிக்கு வித்திடுகின்றன என்றார்.  கடந்த 8 ஆண்டுகளில்  பல்வேறு கட்டமைப்புச் சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே இந்தியா சக்திவாய்ந்த பொருளாதார நாடாக மாறி வருவதாகவும் கூறினார்.

மத்திய அரசின் ஜிஎஸ்டி மிக முக்கியமான சீர்திருத்தம் என்றும், உலக நாடுகள் சவாலான சூழலைச் சந்தித்த போதிலும், அண்மைகால ஜிஎஸ்டி வரிவசூல் மிகவும் வலுவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது மிக நேர்மையான மற்றும் வெளிப்படையானப் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் திகழ்வதாகவும், அரசுக்கு வரிச்செலுத்துவதை மக்கள் வழக்கமாக்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.  நிதித்துறையில் மேற்கொண்ட தனியார்மயமாக்கல், டிஜிட்டமயமாக்கல்  போன்ற சீர்திருத்தங்கள் வணிகத்தை எளிமையாக்கியிருப்பதாகவும் கூறினார்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக, உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டங்கள் 14 துறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யுக்ரைன்-ரஷ்யா போர் குறித்து பேசிய மத்திய அமைச்சர்இன்றைய சகாப்தம் போர் யுகமாக இருக்கக்கூடாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டினார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின் கிடைத்த படிப்பினையைக் கருத்தில்கொண்டு, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கே  அரசு முன்னுரிமை அளிப்பதாக அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

*****

MS/ES/DL



(Release ID: 1889458) Visitor Counter : 151