குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

என்சிசி குடியரசு தின முகாம் 2023 தொடக்க விழாவில் துணை ஜனாதிபதி திரு ஜக்தீப் தன்கரின் உரை

Posted On: 07 JAN 2023 4:27PM by PIB Chennai

என் அன்பான என்சிசி மாணவர்களே,

இந்தக் குடியரசு தின என்சிசி முகாமில், நாடு முழுவதிலுமிருந்து வரும் என்சிசி மாணவர்கள்- சிறுவர்-சிறுமிகள், உங்கள் அனைவரோடும் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த சந்தர்ப்பத்தில் உங்களுடன் இருப்பதற்கு கிடைத்த இந்த வாய்ப்புக்கு நன்றி. என்சிசி மாணவர்களின் உயர்தர பயிற்சி, மன உறுதி மற்றும் ஊக்கத்திற்கு எனது பாராட்டுகள்.

இன்றைய நிகழ்வை உன்னிப்பாகத் திட்டமிட்டு செயல்படுத்திய அனைத்து மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

உங்கள் அனைவருக்கும் மிகவும் பலனளிக்கும் மற்றும் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.

உலகின் மிகப்பெரிய இளைஞர் அமைப்பான என்சிசிக்கு குறிப்பாக அமிர்தகாலத்தின் கடமைப் பாதையில் வீறு நடைபோடும் பயிற்சியாளர்களுக்கு எப்போதும் போற்றப்பட வேண்டிய தருணமாக இருக்கும்.

நமது இளம் மாணவர்களிடையே பண்பு, தோழமை மற்றும் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை வளர்ப்பதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதில் என்சிசி-ன் சிறந்த பங்களிப்பை பெரிதும் பாராட்டுகிறேன்.

உங்கள் நம்பிக்கையையும், புத்திசாலித்தனத்தையும் பார்க்கும்போது, சித்தோர்கரில் உள்ள சைனிக் பள்ளியில் நான் என்சிசி மாணவனாக இருந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். அந்த நாட்களை எண்ணிப்பார்க்கும் போதுஎனக்கு மிகவும் இனிமையான நினைவுகள் தோன்றுகின்றன. அங்கு நான் கற்ற கல்வி தான் என்னை உருவாக்கியது.

ஆண்களும், பெண்களும், என்சிசி மாணவர்களாகிய நீங்கள் வேற்றுமையில் இந்தியாவின் ஒற்றுமையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். என்சிசி  பல ஆண்டுகளாகவலிமை மற்றும் ஒழுக்கம் நிறைந்த துடிப்பான இளைஞர்களை உருவாக்கியுள்ளது.  அவர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

என்சிசி, நமது நாட்டின் பல்வேறு பாரம்பரியத்தைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்துகிறது. மொழி, கலாச்சாரம், மதம் மற்றும் புவியியல் தடைகளை மீறி தேசிய ஒருங்கிணைப்பை வளர்க்கிறது.

என்சிசி உங்களில் ஒன்றிணைந்து செயல்படும் மனப்பான்மையையும், ஒன்றாக வாழ்வதற்கான அனுபவத்தையும் உருவாக்குகிறது. மற்ற மாநிலங்களின் மாணவர்களுடன் ஒத்துழைத்து இணக்கமாக பணியாற்றுங்கள்.

என்சிசி-ல் நெறிமுறைகள் மற்றும் சமூக முக்கியத்துவங்கள், ஒற்றுமையின் வலிமை மற்றும் தனிப்பட்ட தியாகத்தின் மதிப்பு ஆகிய முக்கிய அங்கங்கள் உள்ளது.

நமது பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் என்சிசி முகாம்கள் மற்றும் குழுச் செயல்பாடுகள் ஒருவருக்கொருவர் தனித்துவத்தைப் பாராட்டும் உணர்வை உருவாக்கி நட்பை வளர்க்கின்றன.

என்சிசி  என்பது சமுதாயத்திற்கு தன்னலமற்ற சேவையை வழங்குவதற்கும், எந்த தேசிய காரணத்திற்காகவும் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கக்கூடிய பயிற்சி பெற்ற மனித நீர்த்தேக்கமாகும்.

எல்லா இடங்களிலும், எங்கும் உதவிகளை வழங்குவதற்காக தேசிய சேவைக்காகக் கிடைக்கும் நாட்டின் ஒழுக்கமான, பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் ஊக்கமளிக்கும் இளம் படையாக என்சிசி-ஐ விவரிக்கலாம்.

இந்த மதிப்புமிக்க குடியரசு தின முகாமில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த என்சிசி குடியரசு தின முகாம், என்சிசி-ன் பொன்மொழியான "ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்" என்பதை எடுத்துக்காட்டுகிறது.

எனது இளம் நண்பர்களே- நாம் சுதந்திர அமிர்தப் பெருவிழா கொண்டாட்ட காலத்தில் இருக்கிறோம். உலக அளவில் வாய்ப்புகளுக்கும், முதலீட்டுக்கும் நமது தேசம் இப்போது உலகளாவிய இலக்காக இருக்கிறது.

இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்ளுமாறும், நமது சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்ளுமாறும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் நமது நாடு முன்னேறி வருகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக உள்ளது.

ஒரு சில மாதங்களுக்கு முன்பாகவே நாம் இங்கிலாந்தை விட முன்னேறிச் சென்றோம். தசாப்தத்தின் தொடக்கத்தில் நாம் மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருப்போம்.

இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது பெரிய வாகன சந்தையாக மாறியுள்ளது.

மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் "ஆத்ம நிர்பார்" தற்சார்பு இந்தியாவாக உருவெடுத்து கொவிட் தொற்றுநோயின் சவாலை எதிர்கொண்டோம்.

 

800 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தரமான உணவை வழங்கவும், 220 கோடி தடுப்பூசி டோஸ்களை வழங்கவும், ஏப்ரல் 01, 2020-ல் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளவும் நம்மால் முடிந்தது.

என்சிசி மாணவர்கள் உருவகப்படுத்துதல் மூலம் நவீன தொழில்நுட்பங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

புதிய கல்விக் கொள்கை 2020, மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு சிறந்த சிந்தனையுடன் உருவானது. மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.

சுமார் 90 பல்கலைக்கழகங்கள் என்.சி.சி.யை விருப்பப் பாடமாக வழங்குவதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த அளவில் உங்களை வழி நடத்துவதற்கான  உறுதிமொழியை நீங்கள் அனைவரும் எற்பீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இந்த முக்கியமான நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். சந்தேகத்திற்கு இடமின்றி, என்.சி.சி. மாணவர்களாகிய நீங்கள், நமது தேசத்தை எப்போதும் முதன்மையானதாக வைத்திருக்கும் வளர்ச்சிக்கு உதவுவீர்கள்.

என்.சி.சி தொடர்ந்து பலத்தில் சிறந்து விளங்கி வலிமைமிக்கதாக வளரட்டும், நம் நாட்டிற்கு சிறந்த தலைவர்களை உருவாக்கட்டும்.

 

ஜெய் ஹிந்த்!

*****

MS/GS/DL


(Release ID: 1889448) Visitor Counter : 192


Read this release in: English , Urdu , Hindi , Kannada