திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் மேளா இந்தியாவின் 242 மாவட்டங்களில் ஜனவரி 9 அன்று நடைபெறுகிறது

Posted On: 06 JAN 2023 2:14PM by PIB Chennai

திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், பிரதமரின்  தேசிய தொழிற்பழகுநர் மேளாவை  ஜனவரி 9  அன்று ஏற்பாடு செய்துள்ளது.  இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 242 மாவட்டங்களில் இந்த மேளா நடைபெறுகிறது.

இந்த மேளாவின் ஒரு அங்கமாக, உள்ளூர் இளைஞர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி மூலம் தங்கள் தொழில் வாழ்க்கையை வடிவமைக்க பொருத்தமான வாய்ப்புகளை வழங்குவதற்காக உள்ளூர் வணிக நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நிறுவனங்களின் பங்கேற்பு  சாட்சியாக இருக்கும். பங்கேற்கும் நிறுவனங்களுக்கு ஒரே தளத்தில் சாத்தியமான பயிற்சியாளர்களை சந்திக்கவும், விண்ணப்பதாரர்களை அந்த இடத்திலேயே தேர்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும். தொழில் பழகுநர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.

தனிநபர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ ஐப் பார்வையிடுவதன் மூலம் மேளாவிற்குப் பதிவு செய்யலாம். 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்று திறன் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது ஐடிஐ டிப்ளமோ முடித்தவர்கள் அல்லது பட்டதாரிகள் இந்த பயிற்சி மேளாவில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தின் மூன்று நகல்களையும், அனைத்து மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்களின் மூன்று நகல்களையும், புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை/ஓட்டுநர் உரிமம் போன்றவை) மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் அந்தந்த இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் உரிய அனைத்து ஆவணங்களுடன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த கண்காட்சியின் மூலம், விண்ணப்பதாரர்கள் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களைப் பெறுவார்கள்.

***

KPV/RJ

               


(Release ID: 1889151) Visitor Counter : 581