நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி அமைச்சகம் கூடுதலாக 19 முதல் மைல் இணைப்புத் திட்டங்களை (எஃப்எம்சி) செயல்படுத்த உள்ளது

Posted On: 02 JAN 2023 2:55PM by PIB Chennai

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கோல்இந்தியா லிமிடெட் மற்றும் எஸ்சிசிஎல் நிறுவனங்களுக்காக, 330 மில்லியன் டன் திறன் கொண்ட  புதிய 19 முதல் மைல் இணைப்புத் திட்டங்களை (எஃப்எம்சி)  2026-2027 நிதியாண்டில் கூடுதலாக செயல்படுத்த அந்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த அமைச்சகம் ஏற்கனவே 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 526 எம்டிபிஏ திறன் கொண்ட  55 எஃப்எம்சி திட்டங்களை செயல்படுத்த ஏற்கனவே  முடிவு செய்தது. இதில் 95.5 எம்டிபிஏ திறன் கொண்ட 8 திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எஞ்சிய திட்டங்கள் 2025-ம் நிதியாண்டில் செயல்படுத்த உள்ளன.

எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நிலக்கரி அப்புறப்படுத்தலை உறுதி செய்ய ஏதுவாக மத்திய நிலக்கரி அமைச்சகம், தேசிய நிலக்கரி தளவாடத் திட்டத்தை உருவாக்கி வருகிறது. இந்தத்திட்டத்தில் நிலக்கரி சுரங்கங்களையொட்டி உள்ள ரயில்வே  பகுதிகளை இணைத்தல் மற்றும் நிலக்கரி வயல்களில் ரயில்வே இணைப்பு சாலைகளை பலப்படுத்துதல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மத்திய நிலக்கரி அமைச்சகம், எதிர்வரும் 2025ம் நிதியாண்டில் 1.39 பில்லியன் டன் நிலக்கரியையும், 2030-ன் நிதியாண்டில் 1.5 பில்லியன் டன் நிலக்கரியையும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்துடன் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான முறையிலும், வேகமாகவும், குறைந்த செலவிலும் நிலக்கரியை அப்புறப்படுத்துவதும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலக்கரியை சாலை மார்க்கமாக அப்புறப்படுத்துவதில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை கையாள்வதற்கான வழிமுறைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நிலக்கரியை கையாளும் ஆலைகளை இயக்கவும், பல்வேறு அளவுகளில் நிலக்கரியை உடைத்து உருமாற்றுதல் உள்ளிட்டவற்றை கணினி மூலம் மேற்கொள்வதற்கான ராபிட் லோடிங் முறை ஆகியவையும்  செயல்படுத்தப்பட உள்ளது.

நாப்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2020-22 ம் ஆண்டில் நடத்திய ஆய்வில், வருடாந்திர  கார்பன் வெளியேற்றத்தை சேமித்தல், நிலக்கரியை லாரிகள் மூலம் வெளியேற்றுவதை குறைத்தல் ஆகியவற்றின் மூலம் ஆண்டுக்கு 2100 கோடி ரூபாய் சேமிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1888037

 

***  

AP/ES/RS/KPG



(Release ID: 1888047) Visitor Counter : 152