அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அணுசக்தித் துறையின் ஆண்டு இறுதிக் கண்ணோட்டம் -2022

Posted On: 01 JAN 2023 9:02AM by PIB Chennai

2014 முதல் 2022 வரையில் மத்திய அணுசக்தித் துறையின் முக்கிய சாதனைகளில் சில:

* அப்சரா அணு உலையின் தரம் மேம்படுத்தப்பட்டு உயர் திறனுடன் 2018 செப்டம்பர் 10-ம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கியது.

* பாபா அணு ஆராய்ச்சி மையததில் துருவா அணு உலையில் கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் 4000 மாதிரிகள் கதிரியக்கம் செய்யப்பட்டுள்ளன.

* இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் ஃபாஸ்ட் ப்ரீடர் டெஸ்ட் ரியாக்டரில் 2022-ம் ஆண்டு 23.5 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2014-2022 காலகட்டத்தில் மொத்தம் 75.8 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

*  இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் மெட்டல் ஃப்யூயல் பின் ஃபேப்ரிகேஷன் பிரிவு மே, 2018ல் குடியரசுத் தலைவரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

* நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் சமூகப் பணிகளுக்காக சமூகப் பொறுப்புணர்வு நிதியாக  ரூ. 101.96 கோடியை செலவு செய்துள்ளது.

* பாபா அணு ஆராய்ச்சி மையம் குறைந்த செலவில் புற்றுநோய் சிகிச்சைக்கான பல கதிரியக்க மருந்துகளின் உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளது.

* பாபா அணு ஆராய்ச்சி மையம் கழிவுகளை வளமாக்கும் தத்துவத்தில் பணிபுரிகிறது.  சுமார் 1 லட்சம் க்யூரி சீசியம் மீட்டெடுக்கப்பட்டு இதில் சுமார் 6 கிலோ கதிர்வீச்சுக்காக பென்சில் பீம்களாக மாற்றப்பட்டது.

*  அணுசக்தி துறையின் கீழ் உள்ள மும்பை டாடா நினைவு மருத்துவமனை,புற்றுநோய் சிகிச்சையில் ஆண்டுதோறும் 80,000 புதிய நோயாளிகள் மற்றும் 650,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குத் தொடர் சிகிச்சைகளைச் செய்துள்ளது.  நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு உயர்தர புற்றுநோய் சிகிச்சையை இது வழங்குகிறது.

* பாபா அணு ஆராய்ச்சி மையம், கதிரியக்கத்தைப் பயன்படுத்திப் பயன் அடையும் வகையில் வேளாண் பணிகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது. தற்போதுவரை நிலக்கடலை, வெண்டைக்காய், உளுந்து, கடுகு, சோயாபீன், சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களில் புதிய விதை வகைகளை வெளியிட்டுள்ளது.

* பாபா அணுசக்தி மையத்தின் நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பல கிராமங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

* பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் வெப்ப ஆவி அழுத்த அடிப்படையிலான, கடல்நீரில் உப்புநீக்கும் தொழில்நுட்பம் இரண்டு தொழில்முனைவோரின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

* அணுசக்தியை அமைதிக்காக பயன்படுத்துவதற்கான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஜப்பான், பிரிட்டன், வியட்நாம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் கையெழுத்தாகியுள்ளது.

* பங்களாதேஷில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்காக ரஷ்யா, பங்களாதேஷ் மற்றும் இந்தியா இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

* அணுசக்தித் துறையின் கீழ் உள்ள அடிப்படை அறிவியல் உயர் திறன் மையம் (CEBS) 516 அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

* கடந்த 8 ஆண்டுகளில், அணுசக்தித் துறை ஏறத்தாழ 156 காப்புரிமைகளைக் கோரி விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது. அவற்றில் 121 இதுவரை வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை பல்வேறு கட்ட ஆய்வுகளில் உள்ளன.

******

MS/PLM/DL


(Release ID: 1887861) Visitor Counter : 369