குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
प्रविष्टि तिथि:
31 DEC 2022 4:33PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், புத்தாண்டு - 2023-ஐ முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரது முழுமையான வாழ்த்துச் செய்தி:
"புத்தாண்டு - 2023-ஐ வரவேற்கும் வேளையில் நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மகிழ்ச்சியான தருணம், நமது முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையை உறுதிசெய்து, அதிக உத்வேகத்துடன் நமது முயற்சிகளைத் தொடர ஒரு வாய்ப்பாகும்.
இந்தியாவை முன்னேற்றம் மற்றும் செழிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டுடன் புத்தாண்டைத் தொடங்குவோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கும் தேசம், வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு உலகில் மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது.
நமது வாழ்வில் அமைதி, ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கான நமது முயற்சிகளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்வோம்."
இவ்வாறு குடியரசு துணை தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
******
MS/PLM/DL
(रिलीज़ आईडी: 1887771)
आगंतुक पटल : 183