விண்வெளித்துறை
ஆண்டுக் கண்ணோட்டம் - 2022: விண்வெளித்துறை
Posted On:
31 DEC 2022 11:24AM by PIB Chennai
2022 ஜூலையில் பாதுகாப்பான மற்றும் நீடித்த செயல்பாட்டு நிர்வாகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இஸ்ரோ முறையை மாண்புமிகு விண்வெளித்துறை இணையமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
உலகளாவிய செலுத்துவாகன வணிகச் சந்தையில் இந்தியாவின் போட்டித் தன்மையை விரிவுபடுத்துவதாகவும் தற்சார்பு இந்தியாவிற்கு விளக்கமாகவும் 2022 அக்டோபர் 23 அன்று எல்விஎம்3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘வானிலிருந்து குதிப்பதற்கான ஒருங்கிணைந்த முதன்மைப் பாரசூட் சோதனை’ 2022, நவம்பர் 18 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள பபினா துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ஒரு பாரசூட்டில் கோளாறு ஏற்பட்டாலும் மற்றொன்று விரிந்து தரையிறங்க உதவும் வகையில் மூன்று பாரசூட்களைக் கொண்ட இந்த சோதனை ககன்யான் திட்டத்திற்கு மிக முக்கியமானதாகும்.
2022, நவம்பர் 26 அன்று பிஎஸ்எல்வி – சி54 செலுத்து வாகனம் மூலம், இந்தியா-பூடான் செயற்கைக்கோள் (ஐஎன்எஸ்-2பி) உட்பட எட்டு நானோ செயற்கைக்கோள்களுடன் இஓஎஸ் – 06 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோ மூலம் நானோ செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் பயிற்சித் திட்டம் உன்னாத்தி 2018, ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. 2019 ஜனவரி 15 முதல் மார்ச் 15 வரை நடைபெற்ற முதல் தொகுப்புப் பயிற்சியில் 17 நாடுகளைச் சேர்ந்த 30 பங்கேற்பாளர்கள் பயனடைந்தனர். இரண்டாம் தொகுப்புப் பயிற்சி 2019, அக்டோபர்-டிசம்பர் காலத்திலும், மூன்றாம் தொகுப்புப் பயிற்சி 2022, அக்டோபர்-டிசம்பர் காலத்திலும் நடைபெற்றது.
2019ல் யுவிகா எனும் இளம் விஞ்ஞானி சிறப்புத் திட்டத்தை இஸ்ரோ தொடங்கியது. விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல், விண்வெளிப் பயன்பாடு பற்றி இளைஞர்களுக்கு எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்ட யுவிகா திட்டத்தின் இரண்டாவது நிகழ்வு 2022, மே மாதத்தில் நடைபெற்றது.
விண்வெளி தொழில்நுட்பப் புதிய கண்டுபிடிப்பு வலைப்பின்னலைத் தொடங்குவதற்காக இஸ்ரோவும் சோஷல் ஆல்பா நிறுவனமும் 2022 டிசம்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த வகையில் இது முதலாவதாகும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சத்தீஷ் தவான் விண்வெளி மைய வளாகத்தில் முதலாவது தனியார் ஏவுதளம் மற்றும் பணிக் கட்டுப்பாட்டு மையத்தை சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ் பிரைவேட் லிமிடெட் 2022, நவம்பர் 25 அன்று நிறுவியது. இந்த நிறுவனம் உருவாக்கிய செமி கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின் இஸ்ரோவில் 2022 நவம்பர் 4 அன்று வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
ரூ. 824 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்துடன் 5 பிஎஸ்எல்வி தயாரிப்பில் எச்ஏஎல், எல்&டி ஆகியவை இந்தியத் தொழில்துறை கூட்டாளிகளாக இருக்கும்.
இந்திய விண்வெளிக் கொள்கை - 2022 விண்வெளி ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை, தொழில்துறை குழுக்களுடன் விரிவான ஆலோசனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைகள், அதிகாரமளிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, கூடுதலான ஒப்புதல் செயல்முறை நடைபெறுகிறது.
******
MS/SMB/DL
(Release ID: 1887733)
Visitor Counter : 524