ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊரக மேம்பாட்டு அமைச்சகம், 2022-ஆம் ஆண்டில் மேற்கொண்ட முக்கிய முன்முயற்சிகள், ஒரு பார்வை

Posted On: 30 DEC 2022 9:48AM by PIB Chennai

2022-ஆம் ஆண்டில் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் (ஊரக மேம்பாட்டுத் துறை) மேற்கொண்ட முக்கிய முன்முயற்சிகள் மற்றும் சாதனைகள் பின்வருமாறு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் 11.37 கோடி குடும்பத்தினர் வேலை வாய்ப்பு பெற்றிருப்பதோடு 289.24 கோடி தனிநபர் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன (டிசம்பர் 15, 2022 வரை)

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம்:

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் டிசம்பர் 15, 2022 வரை மொத்தம் 2.50 கோடி வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2.11 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நிதியாண்டு 2022-23 இல் 52.78 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 31.43 லட்சம் வீடுகளின் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தீன்தயாள் அந்தியோதயா திட்டம்- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்:

தீன்தயாள் அந்தியோதயா திட்டம்- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் (தில்லி, சண்டிகர் தவிர்த்து) 723 மாவட்டங்களில் 6861 வட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் அதிக பாதிப்புக்குள்ளாகக் கூடிய சமூகத்தைச் சேர்ந்த 8.71 கோடி பெண்கள், 81 லட்சம் சுய உதவிக் குழுக்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

பிரதமரின் கிராம சாலைகள் திட்டம்:

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 23,364 கோடி செலவில் 2022-ஆம் ஆண்டில் 39,413 கிலோமீட்டர் சாலைகளும், 1394 பாலங்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள்:

கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் 3.74 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுள் 2.51 லட்சம் பேர் 30.11.2022 வரை நல்ல நிலையை அடைந்துள்ளனர்.

தீன்தயாள் உபாத்யாயா ஊரக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டம்:

தீன்தயாள் உபாத்யாயா ஊரக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிதியாண்டு 2022-23 இல் மொத்தம் 1,09,293 விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 52,456 பேருக்கு 30.11.2022 வரை பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887438

************

(Release ID: 1887438)

AP/RB/KRS


(Release ID: 1887489) Visitor Counter : 432